Header Ads



எமது மக்­க­ளிடம் மிகவும் அன்­பாக, ஒரு கோரிக்­கை­யை முன்­வைக்­கிறேன்...!


-விடி­வெள்ளி  ARA.Fareel -

இந்­நாட்டு முஸ்­லிம்கள் தமது முன்­னோர்­களால் பெற்றுத் தரப்­பட்ட உரி­மை­களைப் பாது­காத்துக்  கொள்­வதில் அர­சியல் மற்றும் பிரி­வு­களை மறந்து கை­கோர்க்க வேண்டும்.

கிடைத்­துள்ள உரி­மை­களைப் பறி­கொ­டுத்து விடாது  உள்­ளதைப் பாது­காத்துக் கொள்­வதில் நாம் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தலை­வ­ராக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வரு­டாந்த மாநாடும் புதிய நிர்­வா­கிகள் தெரிவும் கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நடை­பெற்­றது. இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட 25 நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலமே தலை­வ­ராக ரிஸ்வி முப்தி தெரிவு செய்­யப்­பட்டார். 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலை­வ­ராக எதிர்­வரும் மூன்­றாண்டு காலத்­துக்கு மீண்டும் தெரி­வா­கி­யுள்ள ரிஸ்வி முப்தி 'விடி­வெள்ளி'க்கு விஷேட பேட்­டி­யொன்­றினை வழங்­கினார். இந்தப் போட்­டியின் போதே அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு முஸ்லிம் சமூ­கத்­துக்கு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­த­தா­வது 

'பல்­லின சமூ­கத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் நாம் ஏனைய சமூ­கங்­களின் உணர்­வு­க­ளையும் மதித்து எமது உரி­மை­களைப் பாது­காத்துக் கொண்டு கௌர­வ­மாக வாழ வேண்டும். திடீ­ரென ஏற்­படும் உணர்ச்­சி­க­ளுக்கு ஆட்­பட்­டு­வி­டாது நிதா­ன­மாக சிந்­தித்துச் செயற்­பட வேண்டும். 

நான் எமது மக்­க­ளிடம் மிகவும் அன்­பாக மேலும் ஒரு கோரிக்­கை­யையும் முன்­வைக்­கிறேன். உல­மாக்கள் சமு­தா­யத்தை வழி நடத்­து­ப­வர்கள். நல்­வ­ழியைப் போதிப்­ப­வர்கள். நீங்கள் உல­மாக்­களை நேசி­யுங்கள்.

அவர்கள் மீது அன்பு வையுங்கள். அவர்­களும் மனி­தர்­கள்தான். மன்­னிக்­கப்­ப­டக்­கூ­டிய மனித தவ­றுகள் அவர்கள் செய்­தி­ருந்தால் அவற்றை மன்­னி­யுங்கள். சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உல­மாக்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குங்கள். 

ஜம்­இய்­யாவில் 15 பிரி­வுகள் உள்­ளன. இந்த 15 பிரி­வு­க­ளான கத­வு­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்கு விருப்பமான விட­யங்­களில் இணைந்து சமூ­கத்­துக்குச் சேவை செய்­யுங்கள். 

நான் உல­மாக்­க­ளுக்கும் நாட்டின் அர­சாங்­கத்­துக்கும் துறைசார் நிபு­ணர்­க­ளுக்கும் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் தூதுவிடுக்கிறேன். இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம். சகவாழ்வுக்கு வழிசமைப்போம். எமது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.

6 comments:

  1. So all the problems that our Muslim community has will continue for another three years.

    ReplyDelete
  2. ஜம்மியத்துல் உலமாவின் தலைமை நாட்டில் உள்ள வர்த்தகர்களுடன் மட்டுமன்றி ஏழை எளிய மக்களுடனும் தொடர்புகளை பேணி வரவேண்டும்.வரலாற்றில் காணப்படும் இஸ்லாமிய தலைமைகள் வறியவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளது .

    ReplyDelete
  3. Mr.shihabdeen if u can solve the problem y don't u do

    ReplyDelete
  4. Mr. Abdulla, Thank you for accepting my skill & ability that I can solve the problems of our muslim community in Sri Lanka. But so far, I have NOT decided to start an NGO in an Islamic Name, issue a piece of paper mentioning "Halal"and earn millions, create divisions amoung muslims, lick the boots of Rajapaksha's and get benefits, fixing Eid day according to poultry traders and politicians, in short, making our community coward.

    If you look back last three years, many problems have been escalated aginst muslims community, and no constructive measures have been taken to lid them on buds at the begining itself, rather, allowed to inflame, and finally, we were ordered to recite "kunooth" at Jumma prayers.

    Mr. Abdulla, do you know the organization chart of ACJU?? How do they accept members, how do they appoint different posts, how do they opperate, how do they get funds and spend, how much they have been paid as salary, and what is their internal and external expenditure??

    If you know the answers to my questions, please let me know.

    ReplyDelete

Powered by Blogger.