Header Ads



அமெரிக்காவில் இருந்து, துருக்கியை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது - எர்துகான்


துருக்கியில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் யார் என்பது குறித்து தகவலை, அந்நாட்டு ஜனாதிபதி எர்துகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, என்ன நடந்து என்பது குறித்து எனக்கு தெரியும், ராணுவ புரட்சிக்கு பெதுல்லாவே காரணம், அமெரிக்காவில் இருந்து துருக்கியை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த பெதுல்லா அமெரிக்காவின் பெனிஸ்வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கி றார்.

பெதுல்லாவும் அதிபர் எர்டோகனும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர். எர்டோ கனின் சர்வாதிகார போக்கால் 1999-ல் துருக்கியில் இருந்து பெதுல்லா வெளியேறினார்.

துருக்கி மட்டுமன்றி உலகம் முழுவதும் பெதுல்லாவுக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் பெதுல்லாவுக்கு நெருக்கமான 2 தொலைக்காட்சி நிறுவனங்கள், 22 தொழில் நிறுவ னங்களை துருக்கி அரசு கையகப்படுத்தியது.

மேலும் துருக்கி ராணுவத்தில் பெதுல்லாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் மீதும் துருக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் ராணுவ கர்னல் முகரம் கோஸ் என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் துருக்கி ராணுவ புரட்சி நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. பத்குல்லாஹ் கூலான், ஒரு யூத, மேற்கத்தைய ஏஜன்ட்.
    மதகுருவாம்...
    அமெரிக்காவில் தஞ்சமாம்..
    2 TV ஸ்டேஷன், 23 தொழிற்சாலைகள் சொந்தமாம்...

    உலகமே இந்த முட்டாள் தனமான வார்த்தைகளை நம்புகிறதே

    ReplyDelete
  2. Xha ur really intelligence man you can come a American president or one of the middle east king

    ReplyDelete

Powered by Blogger.