Header Ads



கொடியவன் கைது


சிறுமிகள் உட்பட 100க்கும் அதிகமான பெண்களுடன் சடங்கிற்காக பாலுறவில் ஈடுபட்ட எச்.ஐ.வி தொற்றிய நபர் ஒருவரை மாலாவி நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளம் பெண்களுடன் பாலுறவில் ஈடுபட அவர்களது குடும்பத்தினரிடம் பணம் அறவிட்டதை எரிக் அனிவா என்ற அந்த நபர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்தே அவரை கைது செய்யும்படி மாலாவி ஜனாதிபதி பீடர் முதரிக்கா உத்தரவிட்டுள்ளார். தாம் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதையும் அனிவா ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்கும் ஓர் சடங்கிற்காக குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்களால் தாம் பாலியல் உறவில் ஈடுபட பணியமர்த்தப்படுவதாக அனிவா அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி ’சடங்கு’ செய்யவில்லை என்றால் வயதுக்குவரும் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையும் இவர்களிடையே நிலவி வருகிறது.

தெற்கு மாலாவியில் இவ்வாறு பாலியல் தொழில் ஈடுபடும் ஆண்களை ‘ஹயினா’ என்று அழைக்கின்றனர்.

மாலாவி கிராமப்பகுதிகளில் இவ்வாறான ஹயினாக்கள் வாடகைக்கு பெறப்படுவதாகவும் அவர்களுக்கு நான்கு முதல் ஏழு டொலர்கள் வரை வழங்கப்படுவதாகவும் அனிவா பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதில் 12 வயது கொண்ட சிறுமிகளுடனும் தாம் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கலாசாரம் என்ற போர்வையில் இவ்வாறு சட்டத்தை மீறுவதை ஏற்க முடியாது என்று மாலாவி ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிதரும் சடங்குகளுடன் தொடர்புபட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெற்றோர்கள் மீதும் விசாரணை நடத்தும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

1 comment:

  1. There are laws that guarantee fraction of world population
    remain in the dark as long as possible . And there are
    wars when change is going to happen to eradicate darkness.
    India is another great place for superstitions . Some
    Muslims in Srilanka believe that dead saints can
    influence Allah to do favours to them and this belief
    goes on and on from generations to generations even
    after experiencing scientific achievements day by day .

    ReplyDelete

Powered by Blogger.