Header Ads



இலங்கையில் அமெரிக்காவின் இராணுவத் தளம் - குணதாச

சூழ்ச்சியாளர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட சூழ்ச்சியான அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையான வகையில் நாட்டை மாற்றும் சூழ்ச்சிக்கு தயாராகி வருவதாக கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரம், அரசியல், அரசு என அனைத்து துறைகளையும் மேற்குலகமயமாக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. நாட்டில் உள்ள அதியுயர் நீதி கட்டமைப்பை மேற்குலகமயமாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

அது மாத்திரல்லாது முழு இலங்கை சமூகத்தையும் மேற்குலக சக்திகளுக்கு தேவைகளுக்கு ஏற்றவகையில் மாற்றி வருகின்றனர். தந்திரமான முறையில் இந்த வெளிநாட்டு சூழ்ச்சி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

அது மாத்திரமல்லாது நாளுக்கு நாள் வெளிநாட்டு தலைவர்களும் நீதிபதிகளும் இலங்கைக்கு வந்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு விட்டுச் செல்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதால், இலங்கையை அமெரிக்காவின் காலனித்துவ நாடாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மாத்திரமல்லாது, அரசியலமைப்புச் சட்டத்தை கூட வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப மாற்ற இந்த நல்லாட்சி அரசாங்கம் தயாராகி வருகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை உடன்படிக்கை ஒன்றின் மூலம் இந்தியாவுக்கு வழங்க தயாராகி வருகின்றனர். மற்றுமொரு பகுதியை சிங்கப்பூருக்கு வழங்க உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கங்கள் இலங்கையை சிங்கப்பூராக மாற்றவே எப்போதும் முயற்சித்து வந்துள்ளன. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் அதளபாதாளத்திற்கே செல்லும்.

ஊழல், மோசடி, அரசியல் அழுத்தங்கள் போன்றவற்றை இல்லாதொழித்து சாதாரண சமூகம் ஒன்றை மக்களுக்கு உரித்தாக்கி தருவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது அதனை மறந்து போயுள்ளனர்.

அது மட்டுமல்ல இலங்கைக்கு அமெரிக்க காலனி ஒன்றை நிர்மாணிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் மெரின் கோப்ஸ் என மிகப் பலமான இராணுவ தளம் ஒன்றை அமைக்க 6 ஏக்கர் காணிகளை வழங்கி, அதற்காக இரண்டு கப்பல்கள் மற்றும் இரண்டு ஜெட் விமானங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இலங்கையை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இருப்பிடமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

4 comments:

  1. Ivarudaya kandupidippukaga oru walaiyum oru kedayamum yarawadu parisu kodungal !

    ReplyDelete
  2. This will be a conflict of interest to India, if Sri Lanka provide a base to US. This will gradually leave upper hand to India to invade Sri Lanka. During the initial stage Sri Lanka fought the war with LTTE, the US government at the time of Ronald Reagan advised JR gov to resolve the issue by discussing with India. US gov didnt help Sri Lankan JR gov by any means. Even at the time of JR before signing the Indo Lanka agreement at the backdrop he invited the US ambassador and asked for eleventh hour help, that was refused. The yahapalnaya regime hope understand these issues before taking any steps.

    ReplyDelete
  3. அமெரிக்கா-இந்தியாவினால் தான் இலங்கை தற்போது ஓரளவுக்காவது மனிதவுரிமையில் முன்னேற்றம் அடைந்துவருகின்றது. வடமகாணசபை இராணுவ-அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஒழுங்காக நடைபெறுகிறது.
    இவைகளின் செல்வாக்கு இன்னும் அதிகரித்தால் தான் இலங்கையின் பிரச்சனைகளக்கு தீர்வுகள் வரும், இலங்கை முன்நேற்றமடையும்.

    ReplyDelete
  4. It is not an issue for india to invade SL.but should alarm china..us is not worried about india.but china

    ReplyDelete

Powered by Blogger.