July 12, 2016

சத்தியத்திற்கு வெற்றி, ஜாகிரை கைதுசெய்ய எந்த துரும்பும் இல்லை - மகாராஷ்டிரா பொலிஸ்

இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் அல்ல, இந்தியாவிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களோ அல்லது இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களோ ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்து கிடையாது என்று நன்கு தெரிந்தும்....

எவனோ ஒரு தீவிரவாதி சொன்னதற்கு இந்தியாவிலுள்ள பிரபல இஸ்லாமிய அறிஞரின் பிரச்சாரத்தை முடக்க நினைத்த பாசிச பாஜக அரசுக்கு இயலாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று நாட்களாக தேடியும் ஜாகிர் நாயக் உரையிலிருந்து தீவிரவாதத்திற்கு ஆதரவான எதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணற விட்டனர்.

பிரிந்து கிடக்கிறார்கள் பிரித்து மேய்ந்து விடலாம் என்று கங்கணம் கட்டிய பாசிச பாஜக அரசின் எண்ணத்தில் இடி தான் விழுந்தது. இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக களம் இறங்கின. ஆயிரமாயிரம் பிரிவுகள் இருந்தாலும் அல்லாஹு அக்பர் ஒலி கேட்டால் ஒளு செய்து விட்டு ஓரணியில் நிற்கும் சகோதரத்துவத்தை கற்று தந்த மார்க்கத்தில் உள்ளவர்களை பிரித்து மேய்ந்து விடலாம் என்ற எண்ணம் தூள் தூளானது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்...

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜாகிர் நாயக்கிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உண்டு, இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைத்தால் கருத்து வேறுபாடுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு இஸ்லாத்திற்காக ஓரணியில் திரள்வோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் போராட்ட களம் அமைத்தது.

மாநிலம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் அறிவித்தது. தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முஸ்லிம்களும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக குரலும் போராட்ட களமும் அமைத்தனர்.

தற்போது உள்ள நிலவரப்படி ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த வித முகாந்திரமும் இல்லையென்று மகாராஷ்டிரா மாநில காவல்துறை கூறி பின்வாங்கி விட்டது.

நெருப்புக்கே அஞ்சாத சமுதாயம் நரேந்திர மோடியின் வெறுப்புக்கு அஞ்சி விடாது.


19 கருத்துரைகள்:

alhamdulillah idu innum munnetram adya vali vahuthathu hasina modi coproduction muku broken

அல்ஹம்து லில்லாஹ் நம்முடைய ஒற்றுமையும் துஆவும் வீணாப்போகவில்லை இந்த செய்தியை பார்த்தவுன் அழுவதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை நம்முடைய ஒற்றுமையைஒருங்கிணைத்து நம்முடை ஈமானை உறுதியடையச்செய்த அல்லாவுக்கே எல்லாப்புகழும் (குறிப்பு,முஸ்லிம்களின் ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்று பஜகஅரசு உரசிப்பார்த்து இருக்கிறது )

அல்ஹம்து லில்லாஹ் நம்முடைய ஒற்றுமையும் துஆவும் வீணாப்போகவில்லை இந்த செய்தியை பார்த்தவுன் அழுவதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை நம்முடைய ஒற்றுமையைஒருங்கிணைத்து நம்முடை ஈமானை உறுதியடையச்செய்த அல்லாவுக்கே எல்லாப்புகழும் (குறிப்பு,முஸ்லிம்களின் ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்று பஜகஅரசு உரசிப்பார்த்து இருக்கிறது )

அல்ஹம்துலில்லாஹ்

Masha Allah alhamdulillah

Allahu Akbar.alhamdulillah

الله أكبر.. الله أكبر...Allah is The First and The Last… alhamthulillah

الحمدلله ولاحول ولا قوة إلا بالله العلي العظيم

الحمد لله علي كل حال ولاحول ولاقوة إلا بالله العلي العظيم

டாக்டர் ஜாகிர் நாயக் என்ற ‘தாயி’ இற்கு ஆபத்து என்றபோது, அவருடன் இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரம்மாண்டமான ஒரு போரட்டத்திற்குத் தயாரானது TNTJ. இதே எழுச்சியும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இயக்கங்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியையும், ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசுவதையும், பேச்சு முற்றி விவாதத்திற்கு அறைகூவல் விடுக்கும் சின்னத்தனமும் இல்லாத ஒரு முஸ்லிம் சமூகம் உருவாக, இத்துடன் முடிவெடுப்போம்.
வேறுபட்ட கருத்து ஒன்றைக்கண்டால், அதைப்பற்றிப் பேசாமல், பகிரங்க சவால் விடாமல், ‘அவர் விளங்கிக்கொண்டது அப்படி’--நான் விளங்கிக்கொண்டது இப்படி’ என்று விட்டுவிடாமல், ‘நான் சொல்வது மட்டும்தான் சரி’ என்றுவாதிடும் பிடிவாதமானதும், நபித்தோளர்களுக்குள் இருந்த அடக்கமும் பண்பும் இல்லாத விரும்பத்தகாததுமான கொள்கையை விட்டுவிடவேண்டும். அதுதான் நமக்குள் ஒற்றமை ஏற்பட ஒரே வழி! அல்லாஹுவின் கயிற்றை பலமாகப் பற்றிப்பிடிப்போம். இன் ஸாஹ் அல்லாஹ்!

புர்ஹான் வானியின் காெலை மற்றும் மாேடியின் 45000 காேடி ஊழலை மறைக்க பாசிச காவிகளால் திட்டமிட்டு மேற்காெள்ளப்படும் பாெய்ப் பிரச்சாரமே டாக்டர் சாகிர் நாய்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்.

அல்ஹம்துலில்லாஹ் தீமையைக் கண்டால் எதிர்க்க வோண்டும் இஸ்லாம் கற்றுத்தந்த பாடம் எதிர்த்தோம் வெற்றினயைத் தந்தான் அல்லாஹ்.இது மாதிரி இங்கும் BBS க்கு எதிராக அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி எதிர்த்துப் போராடினால்,எவரும் இஸ்லாத்திற்கோ,முஸ்லிம்களுக்கோ,எதுவும் செய்துவிட முடியாது அல்லாஹ்வின உதவி நமக்கு கிடைக்கும் நாம் செய்யவேண்டியது ஒவ்வொரு தொழுகை க்கும் பிறகும் துவா சொய்யவோண்டும்,அல்லாஹ்ஹு அக்பர்

Post a Comment