July 27, 2016

"முஸ்லிம் தலைமைகளின், மயான அமைதி"

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாக இருக்கின்ற நிலையில் முஸ்லிம் தலைமைகள் இன்னும் அமைதியாகவே நல்லாட்சியில் பயணிக்கிறது. நாங்கள் உருவாக்கிய ஆட்சி என்று மார்தட்டி கொள்பவர்கள், நல்லாட்சியின் பயனை மக்கள் அடைந்து கொள்ள கூடியவாறு தங்களின் செயற்பாடுகளை மாற்றி கொள்ளவேண்டும். 

தேர்தல் காலங்களில்  மக்களிடம் வாய்ச்சவாடல்கள் விடுவதும் பிறகு மக்களை ஏமாற்றுவதும். இந்நிலைகளில் இருந்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் மாற வேண்டும். மக்களின் தேவைகளை திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பயன்படுத்த வேண்டும்.

#நுரைச்சோலை வீட்டு திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் வகையில் நல்லாட்சியின் உதவியுடன் மக்களுக்கு கொடுக்கப்படல் வேண்டும். 

#வடக்கு முஸ்லிங்களின் மீள் குடியேற்றம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

#கல்லோயா திட்டம் மூலமும் கந்தளாய் திம் மூலமும் திட்டமிட்டு பறிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முஸ்லிம் மக்களின் காணிகள் பற்றி பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பேசி தீர்வு பெறப்பட வேண்டும்

#உத்தேச யாப்பு திட்டத்தில் முஸ்லிம் மக்கள் சார்பான கருத்துக்கள் முஸ்லிங்களின் எதிர்கால இருப்பை உத்தரவாதப்படுத்தும் முறையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

#முஸ்லிங்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையிலான உறுதிமொழிகள் நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.

#முஸ்லிங்களின் கலாச்சார பாதுகாப்பு; இஸ்லாமிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும்  பள்ளிவாயல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

#அழுத்கமையில், பேரினவாதிகளினால் அகோரமாக நடத்தப்பட்ட இனவாத தாக்குதலின் மூலம் பாதிக்கப்படட மக்களுக்கான நஷ்டா ஈடுகளை பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.

#முஸ்லிம் பிரதேசங்களின் தேர்தல் எல்லை திருத்தம் தொடர்பான சரியான வரைபுகளை முன்வைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவில் பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ளல்.
  
#நிர்வாக கட்டமைப்பு ரீதியாக முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டு முஸ்லிங்களுக்குரிய அதிகாரங்கள்  நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். 

#அக்கரைப்பற்று பொத்துவில் மக்களுக்குரிய வட்டமாடு காணிப்பிரச்சினை தீர்த்து மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்படல் வேண்டும்.  

#கிழக்கு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். (உதாரணமாக : பொத்துவில் பிரதேசம் - ஆசிரியர் பற்றாக் குறையை காரணம் காட்டி ஒரு பாடசாலையை இழுத்து மூடப்பட்டுள்ளது)

#ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் 

#சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கனவு (பிரதேசசபை/நகரசபை)  நிறைவேற்றி கொடுக்கப்படல் வேண்டும்.      etc .......

இவை யாவும் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு ஆதரவளித்து வாக்கு போட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். இதற்காகவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளீர்கள். மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து இறக்கிய மக்களுக்கு நீங்கள் எல்லாரும் ஒரு பொருட்டல்ல என்பதையும் நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். 

-மனாப் அஹமத் றிசாத்-

4 கருத்துரைகள்:

நல்லாட்சியின் பயனை அவர்கள் அடைந்து கொண்டு தானே இருக்கிறார்கள்!

“The Muslim Voice” is happy that brother Manaaf Ahamed Risath has written the above article professionally explaining in point form the defaults of our Muslim politicians and what has to be delivered to the community politically and administratively under the present government which the Muslims played a major role in “tipping the balance” for “Hansaya” and the Yahapalana government to win in 2015. The Muslim politicians for reasons stated below have forgotten that the Muslims are a political power to themselves, Alhamdulillah. As a reason, Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders stage dramas by releasing "press statements" because all of them have DECEIVED THE MUSLIM COMMUNITY for their personal benefits. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they HAVE ALL COVERED UP THE TRUTH ON BEHALF OF THE YAHAPALANA GOVERNMENT TILL NOW.
(Contd)

(Contd from above)
The Muslim Voice” WARNED the Muslim Community of this in the run-up to the Presidential Elections and the General Elections of 2015. The above article in www.jaffnamuslim.com has proved that “THE MUSLIM VOICE” was correct then and now – Alhamdulillah. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER, THE ACMC LEADER and the NATIONAL CONGRESS LEADERS, MINISTER FAIZER MUSTHAPA, MINISTER KABIR HASHIM, MINISTER HALEEM, STATE MINISTER HIZBULLAH, MP. ALI ZAHIR MOULANA and MP. MUJEEBU RAHUMAN NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? WHY HAS NOT THE MCSL, THE YMMA CONFERENCE or YMMA MALIGAWATTE or the ALL CEYLON JAMIYATHUL ULEMA and the SHOORA COUNCIL TOO HAVE NOT CALLED FOR THIS PROBE. THE NATIONAL FRONT FOR GOOD GOVERNANCE (NFGG) HAS MISERABLY AND FULLY FAILED IN THIS RESPONSIBILITY AND DUTY TOO. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. By doing so, it may be possible for Brother Manaaf Ahamed Risath’s proposals could be fulfilled Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.


கட்சிகளுக்காக எம்மைத் தியாகம் செய்வதை விட்டு விட்டு எமக்காக தியாகம் செய்யும் தலைமைகளைத் தேடிப்பிடிக்க வேண்டும். வெறுமனே பதவிகளால் அலங்கரிக்கும் கட்சிகளும் தேவை இல்லை தலைமைகளும் தேவை இல்லை அவை தம்மை மாற்றிக்கொள்ளாதவரை.கடந்த தேர்தலின் பின்னர் தமிழ் சமூகம் எவ்வாறு போராடி தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றது என்பதையும் முஸ்லீம் சமூகம் என்ன செய்கின்றது என்பதையும் ஒப்பிட்டால் பல பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம்

Post a Comment