July 24, 2016

காக்கூசை கேட்டதற்கே, இவ்வளவு ஆத்திரம் அடைகின்றீர்கள்..?

-ஷா மஜிட்-

ஞாபக மூட்டுகின்றேன் !

அன்று சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு சம்பந்தமான ஆலோசனை கூட்டமொன்று நடைபெற்றது.

இச் சந்தர்ப்பத்தில் எமது மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இரா சம்பந்தன் ஐயாவோடு பிரத்தியோக சந்திப்பொன்றை மேற்கொண்டு பின் வரும் கோரிக்கையொன்றை முன் வைத்தார்.

அக் கோரிக்கையாவது...
ஐயா சம்பந்தன் அவர்களே தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் வடக்கையும் கிழக்கையும் இரவோடு இரவாக இணைப்பதற்கு ஜே.ஆரிடம் விரும்பம் தெரிவித்து எம் சமுகத்தை அடகு வைத்து வரலாற்று துரோகத்தை செய்து விட்டார்கள்.

இப்போது நாங்கள் அதை பிரிக்க வேண்டுமென்று போராடினால் விடுதலைப் புலிகளினால் எனது சமுகம் பழிவாங்கப் பட்டு விடும்.

எனவே எனது சமுகத்துக்கான குறைந்த அதிகாரமுள்ள "தென் கிழக்கலகு" என்ற ஒரு நிர்வாக கட்டமைப்பயாவது வழங்க ஆவணை செய்ய வேண்டுமென வினயமாக வேண்டினார்.

அதற்கு சம்பந்தன் ஐயா சீறியெழுந்து நமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் முன் சொன்ன வார்த்தை என்னவென்று தெரியுமா.

மிஸ்டர் அஷ்ரப் இது எங்கள் பிரச்சினைக்கு நாங்கள் பேச வந்த மேசை உங்கள் பிரச்சினை பேசுவதற்கான மேசையல்ல இது ஒரு தசாப்த காலத்துற்கு மேற்பட்ட போராட்டத்திற்கு கிடைக்கப் போகின்ற தீர்வு நீங்கள் எங்கு போராடினீர்கள் தீர்வு பெறுவதற்கு என்று முகத்தில் அறைந்தால் போல் பேசி விட்டு நாங்கள் ஏதாவது முடிந்தால் செய்வோமென விடையளித்தார்.

சம்பந்தன் ஐயாவுடைய தலைக்கணம் மிகுந்த பேச்சை அவதானித்த  மாபெரும் தலைவரவர்கள் ஒரு விடயத்தை இஹ்லாசோடு கூறினார்கள்.

ஐயா சம்பந்தன் அவர்களே நீங்கள் முழு வீட்டையும் ஆளுங்கள் ஒதுக்குப் புறமாயுள்ள காக்கூசையாவது எமக்கென தாருங்களென கேட்டதற்கே இவ்வளவு ஆத்திரம் அடைகின்றீர்கள் ஒரு காலம் வரும் அன்று எனது பிள்ளைகள் வடக்கிலிருந்து கிழக்கை போராடி மீட்பான் அப்போது இந்த அஷ்ரப்பை நீர் நினைப்பீர் என்று கவலையோடு சொன்னார்.

இன்று அவரின் வாய் சொல்படி அல்லாஹூதஆலா எவ்வித சேதாரமுமின்றி "பால் நழுவி பழத்தில் விழுந்தாப் போல்" எமது கிழக்கையும் எம் தலைவனின் இலக்கையும் எம்மிடம் ஒப்படைத்துள்ளான்.

இனி மேல் இணைப்பு பிரிப்பு என்ற சொல்லுக்கு இடமேயில்லை மீண்டும் என் தாயின் சேலையை அடமானம் வைத்து வயிறு வளர்க்க எவருக்கும் கிழக்கு சமுகம் அனுமதி வழங்க மாட்டாது பிரிந்தது பிரிந்ததுதான்.

கரையோர மாவட்டமென்ற பூச்சாண்டி காட்டியோ, அதிகார அலகு என்ற மாயையை காட்டியோ கிழக்கை இணைத்து எம் சமுகத்துக்கு அடிமை சாசனம் எழுத யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வருவதை எவரும் அங்கீகரிக்கக் கூடாது.

கரையோர மாவட்டம் வழங்குவதும் அதிகார அலகு வழங்குவதும் அரசாங்கம்,  இது அரச வர்த்தமாணியில் வெளியிடப்பட்டு வழங்குகின்ற அதிகாரமே தவிர சம்பந்தன் ஐயா வழங்குகின்ற அதிகாரமில்லை.

எனவே மொட்டத் தலைக்கும் முடங்களுக்கும் முடிச்சிப் போட்டு எனது சமுகத்தை பாழ் குழியில் தள்ள யாரையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

அன்று எமக்கென கக்கூசை கூட தர மறுத்த சம்பந்தன் ஐயா இன்று வடகிழக்கை இணைத்து முதலமைச்சர் பதவியைத் தருகிறேன் என்று கூறும் போது நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் அமைச்சு பதவியை கொடுத்தால் நமது தலைவர்கள் எதையும் இழக்கத் துணிவார்களன்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகின்றது .

இது ஒரு நடை முறை சாத்திமுல்ல விடயமா என்று அறியக் கூடிய ஆளுமையற்றவர்களாக எம்மை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் எதைச் சொல்லியாவது அடிமை சாசனம் எழுதுவதில் குறியாகவுள்ளார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவாய் விளங்குகின்றது.


5 கருத்துரைகள்:

Thamilar khal poorvika kudika sakothara enaththavar edaikhalaththil vanthavarkhal yaarida yaar athikaaram keepathu ethu puriya vellai ipoothu maddum keelakkel alla urimai kedaiththa vedathu sollungal

Muzalamaicharaha athaulla wai podawum

மீண்டும் கிழக்கை வடக்குடன் இணைத்து எமது சமூகத்தைக் காட்டிக்கொடுக்கின்ற மூதேவித்தனமான செயலுக்கு ஒத்துழைக்கும் எந்த அரசியல்வாதியையும் சமூகத்தின் சாபம் பாதிக்கும் என்பதை மறவாது அனைத்து அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டும்.

இவையேல்லாவற்றுக்கும் ஒரே வழி ஐ நா சபைதான்,

Separation of North and Eastern Provinces has already been legally made valid. No body has the right even to dream about merging them once again. Mr. sambanthan or Mavai can make request but it has to be decided by the will of the majority of people in the east. Even Mr.Rauff has no moral right to speak about the merger even if sampanthan is prepared to crown mr hakeem as the life long chief or cheap minister for the so called merged north & eastern province or giving a separate unit for the Muslims, we cannot betray the sinhalese in the east for the sake of a seperate unit of devolution for the Muslims

Post a Comment