July 19, 2016

முஸ்லிம் சகோதரர்களின் பின்னூட்டங்களை, வாசித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது...!


-என். எம். அமீன்-

ஊடகத்துடன் புதிதாக இணைந்திருக்கின்ற சமூக ஊடகங்கள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும்.  சமூக ஊடகங்கள் இன்று சமூகத்தின் மத்தியிலே பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. இதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது என்பது பற்றி குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் விழிப்பாக இருப்பது அவசியமாகும். 

சமூக ஊடகங்களிலே எமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எதனையும் பதிவு செய்யலாம். அது சுதந்திமான ஒன்றுதான். ஆனால் இதனை எல்லோரும் பார்க்கிறார்கள். எல்லோரும் வாசிக்கிறார்கள். சில நேரங்களில் இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மிகவும் பாரதூரமானது.

 அண்மையிலே இந்த நாட்டிலே ஒரு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு தொடர்பாக அவருடைய பேட்டி தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள்  உண்மையில் அச்சத்தை ஊட்டுவதாக இருக்கின்றன. நாங்கள் தமிழில் எழுதினால் அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று சிலர் நினைக்கின்றார்கள். இன்று  இந்த நாட்டிலே பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியும். தேவை ஏற்பட்டால் எவரிடமும்  சென்று மொழி பெயர்த்துப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நாங்கள் மிக அவதானமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் சில விடயங்களை படங்களோடு பிரசுரிக்கின்றோம். அந்த படங்கள் சில விடயங்களுக்குச் சாட்சியாக அமைகின்றன. ஆகவே இந்த விடயங்களிலே குறிப்பாக இளைய தலைமுறையையாகிய எங்களுடைய சகோதர சகோதரிகள் கவனமாக இருப்பது மிக முக்கியமாகும். 

ஏனென்றால் இது  பாரிய கலவரங்களைக் கூட உருவாக்கலாம். நாங்கள் சில விடயங்களை மறைத்து வாசிக்க வேண்டி இருக்கின்றது. அதனை நாங்கள் பெரிதுபடுத்தினால் ஏற்படப் போகின்ற விளைவு மிகப் பாரதூரமாக இருக்கும்.  எனவே குறிப்பாக இந்த நாட்டினுடைய இளைய தலைமுறையினராகிய நீங்கள், பயன்படுத்துகின்ற சமூக ஊடகங்களை மிகக் கவனமாக மிக நிதானமாக, நீங்கள் எதை எழுதுகிறீர்கள், எந்த வசனத்தைப் பாவித்து எழுதுகிறீர்கள் என்பது பற்றி சற்று இரண்டாவது முறை சிந்தித்து செயற்பட்டால் மிக நன்றாக இருக்கும். அது சமூகத்தின் இருப்புக்கு பயன்படக் கூடியதாக இருக்கும். 

அண்மையிலே மஹியங்கனையில் நடைபெற்ற துரதிஸ்ட்ட சம்பவமான கொடி விவகாரம் இன்று சமூக ஊடகங்களிலே ஏட்டிக்குப் போட்டியாக போய்க் கொண்டிருக்கிறது. இது வீணான பிரச்சினையை உருவாக்கக் கூடும். நாங்கள் நாட்டின் சில பகுதிகளிலே பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் நாட்டின் குக்கிராமங்களிலே வாழ்கின்ற மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 

கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக வாழுகின்ற சில முஸ்லிம் சகோதரர்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டல்களை அண்மையிலே நான் வாசித்த போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவர்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு இதன் பாரதூரம் புரிவதில்லை.
இந்த நாட்டிலே பரவலாக கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மூன்றில் இரண்டு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு ஊடகத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும். 

இது எங்களுடைய தாய் நாடு. ஆகவே தாய் நாட்டின் நன்மைக்காக, சமூக நன்மைகளுக்காக,  இந்த ஊடகங்களைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 

15 கருத்துரைகள்:

முக்கியமான ஆலோசனைகளுக்கு நன்றிகள். இவற்றை குறிப்பாக இ ளைய தலைமுறையினரும் பொதுவாக அனைவரும் கவனமாக வாசித்து கருத்துக்கு எடுத்துச் செயல்படவேண்டிய முக்கியமான ஆலோசனைகள்.

இவ்வாறுதான் குட்டக்குட்ட குனிந்து குனிந்துதான் பர்மாவில் இந்த நிலை எமது உம்மத்திற்குTrying to curtail the youth/young generation from making/expressing their opinion is NOT HEALTHY for the Muslim community at large. Democracy prevails when opinions are expressed and reasoning is deliberated in society. The flag burning incident that took place in Mahiyangana and the comments/reports that appeared in social media was the RIGHT of the Muslim Community to express. Showing the cause of communal disturbances that may happen as a result of such CONTENT and trying oppress the aspirations and inspiration of the Muslims, especially the younger generation, both male and female is HYPOCRISY of our so-called community leaders and so-called civil society activists. Why are they trying to stop the social media such as www.jaffnamuslim.com and other popular Muslim social media sites from publishing these content? Is it ONLY for them to publish their content which are mostly biased towards their thinking in their print media, newspapers and websites? The Muslims/younger generation should boldly come out with their views/opinions and stand up to their aspirations and NOT ALLOW these unscrupulous deceptive members of the Muslim community to BLOCK the Muslim younger generation in “SENDING OUT THE CORRECT MESSAGES” “To Whom It May Concern”. These young writers cannot be brought over by giving a ”free motor bike or Rs. 1 million interest loan for as car or a free laptop" or a block of state land to build a house or giving a free apartment in the Colombo city. The Muslim Voice" has begun to 'kindle" the political and community aspirations of the Sri Lanka Muslim Community in the right direction we hope, Insha Allah. Are these all NOT THE TRUE ASPIRATIONS and INSPIRATIONS coming out from our “battered Muslim Community” which the Muslim younger generation are expressing/writing we NEED”? The New Social Media trend should be supported by the Muslim community fully, Is this NOT what we NEED, Insha Allah? The conventional Muslim Media personnel (not all) have been corrupt and manipulated by selfish and self-centered community leaders, politicians, political parties and so-called civil society leaders who mingle with the “high society and elite ENGLISH SPEAKING crowds in Colombo circles” and are sometimes bribed with money NOT to write on issues detrimental to those interest groups mentioned above. In the run-up to the 2015 Presidential and General Elections envelope with containing thousands of rupees were distributed to Muslim reporters/ journalists and rural correspondences after being invited and served with a grand dinner at a banquet hall on Marine Drive by a prominent corrupt Muslim Minister of the Mahinda Rajapaksa government and also holding a Ministerial post in the Yahapalana government. But these New Social Median writers/free-lance journalists cannot be influenced in such a manner. They are PURE and genuine in their aspirations, Alhamdulillah. So they have to keep on writing, Insha Allah. The time has come that the above mentioned community tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" is striving to do from the wilderness of the Muslim community political arena, Insha Allah. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

அஸ்ஸலாமு அலைக்கும்,
அமீன் நானா, உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுடைய கவனத்துக்குச் சமர்ப்பணம்!

17.07.2016 ஆம் திகதிய தினக்குரல் வாரமஞ்சரியின் 20 பக்கத்தில், "தீவிரவாதியின் உயிரிழப்பால் பற்றியெரியும் காஷ்மீர்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

தினக்குரல் பத்திரிகையின் பார்வையின் அடக்குமுறைக்க எதிராக எந்தவொரு முஸ்லிமும் எழுந்தால் அவனுக்கு வைக்கும் பெயர்தான் 'தீவிரவாதி'! அதுதான் இவர்களது பத்திரிகை (அ)தர்மம்! இதேவேளையை தமிழ் சகோதரர் ஒருவர் செய்தார் - தமிழ் சகோதரர்களை குறைகூறுவதற்கு சொல்லவில்லை. மன்னிக்கவும். தமிழ் பத்திரிகைகள் ஒரு பக்க சார்பாக எழுதுவதைச் சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம் - என்றால் புகழ்வார்கள்; போற்றுவார்கள்; போராளி, அகிம்சாவாதி ..... என இன்னோரன்ன பட்டத்தையும் சுட்டுவார்கள். அடக்கு முறைக்கு எதிராக வடக்கில் மிகப் பெரியதொரு போர் மூண்டது. அதற்குத் தலைமைதாங்கியவருக்கு இவர்கள் இட்ட பெயர் "போராளி"! என்ன பெயரையும் சூட்டுங்கள்! பரவாயில்லை. ஆனால், சகோதர முஸ்லிம் மக்களைத் தூற்றாதீர்கள்! உங்களது பத்திரிகை தர்மத்தை அதர்மமாக்கி விடாதீர்கள்!

இது பற்றி செய்தி ஆசிரியரிடம், 0112523216 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக வினவியபோது அவரது பதில் ஆச்சரியமானதும் துவேச மனப்பான்மை கொண்டதாகவும் இருந்தது. "நீர் ஓர் 'ஐ.எஸ்'. மாதிரி! என்று 'ஐ.எஸ்' முத்திரை குத்தினார். அத்தோடு நிறுத்தவில்லை, ஏன், வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லையென்று கேட்டதற்கு, எப்படி ஆதரிக்க முடியும்? அவர்கள்தானே 2 மணித்தியால அவகாசத்தில் சொந்த மண்ணை விட்டு முஸ்லிம் சகோதரர்களைத் துரத்தி விட்டார்களே! என்று சொன்னதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் பொதுபல சேனா' வையும் தொடர்புபடுத்தி திட்டித் தீர்த்தார் அந்த செய்தி ஆசிரியர்.

சகோதரர்களே, இப்படியான துவேச பத்திரியையான தினக்குரல் பத்திரிகையைப் புறக்கணியுங்கள்! அதற்கு எதிராக உரிய ஆணைக்குழுக்களிடம் முறைப்பாடு செய்யுங்கள்! அப்போதாவது அவர்கள் திருந்தட்டும்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் அவர்களே, இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு நீங்கள் அல்லும் பகலும் முயற்சிக்கின்றீர்கள். வானொலி தமிழ்ச் சேவை மூலமாகவும் அறிவித்தல் விடுக்கின்றீர்கள். அதற்கு விரோதமாக தினக்குரல் பத்திரிகை செயற்படுகின்றதை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றேன். நடவடிக்கை எடுப்பது சாலச் சிறந்தது.

எம்.எஸ்.எம். லின்னாஸ்,
பாராளுமன்றம்.

*தயவு செய்து வாசகர் பார்த்து விட்டு செய்யுங்கள்! எல்லோரும் அறிந்து கொள்ளட்டும் தினக்குரல் பத்திரிகையின் பேனா அராஜகத்தை!

பாடசாலை மாணவர்களுக்கு ஊடகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிட்சி பட்டறைகள் நடாத்தப்பட வேண்டும் .அதே போல் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் ஊடகம் சம்பந்தமான பயிட்சிகள் வழங்கப்பட வேண்டும் .இப்போது கைபேசி இருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் தாம் என்ற வசதி ஏட்பட்டு உள்ளது .

MSM Linnas,
LTTE 30 வருடங்களுக்கு முன்னர் செய்த தவறுக்காக நீங்கள் இந்த தலைமுறை தமிழர்களை பழிவாங்க விரும்புகிறீர்களோ?
LTTE இப்ப இல்லை, தெரியுமா இது?
இப்படி நாங்கள் மாறி மாறி பழிவாங்கிக்கிகொண்டு இருப்பம்.

LTTE யையும் பயங்கரவாதிகள் என்றே இலங்கையில் அலைக்கப்பட்டது. அது தவிர
நீங்களும் இலங்கை அரசாங்கமும் தமிழர்களை பழிவாங்க இருக்கும்போது இந்தியாவும் மேற்குலகும் தான் எமக்கு ஆதரவு. அதணால் அவர்கள் சொல்லுவதைதான் நாங்கள் சொல்லவேண்டும் அல்லவா?

எங்கும் அரசியல்! Politics everywhere!

There are all kinds of people using social media to express
their knowledge , experience and feelings in so many
different ways . It is like a super market that is open for
good , bad and ugly customers . Social media is not a place
of worship , it is a battle field for soldiers and a learning
centre for learners . It is a world of everything and
everybody today where rogues meet rogues and saints meet saints.

புலி அண்ணன் நீங்க திருந்த மாட்டங்க

These guys r just want to secure their postings...don't do anything for Muslims..

These guys r just want to secure their postings...don't do anything for Muslims..

In another twenty five years,printed journals will be
a thing of the past including the TV . Laptops , Tabs
and smartphones are going to replace them . All news
will take in comments , hot and cold and the social
media will be an inevitable popular platform for
exchanging views on everything on this planet .Ranil
said it was the social media that contributed largely
to bring in the "yahapalanaya."

இப்போது புலிகள் இல்லை தெரியுமா I.S தம்பி.

ஏன் அண்ணன் புலிய Zoo la அடைச்சிட்டாங்களா?

This comment has been removed by the author.

நீங்கள் நல்லா ஜோக்ஸ் சொல்லுறீங்கள் IS தம்பி

Post a Comment