Header Ads



ஞானசாரருக்கு சிறு கீறல் ஏற்பாட்டால் அசாத் சாலி + ஒட்டுமொத்த முஸ்லிம் கவுன்சிலும் பொறுப்பு

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, ஏதேனும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவதாகக் கூறியுள்ள அவரை, உடனடியாக கைது செய்யுமாறு, சிங்கள ராவய அமைப்பினால், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.   நேற்றுச் செவ்வாய்க்கிழமை (05) செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில், சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் . மாகல்கந்தே சுதந்த தேரர் கூறியதாவது,  

'ஞானசார தேரர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்போவதாக, அசாத் சாலி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியே, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளோம். 

சிங்கள பௌத்தர்கள் என்ற அடிப்படையில், நாம் எப்போதும் அவதானமாகவே இருக்கின்றோம். ஞானசார தேரருக்கு சிறு கீறல் ஏற்பாட்டாலும், அதற்கு அசாத் சாலி உள்ளிட்ட ஒட்டுமொத்த முஸ்லிம் கவுன்சிலும் பொறுப்பேற்க வேண்டும். அசாத் சாலி என்பவர், ஜிகாத் அமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. காரணம், தற்கொலைத் தாக்குதலொன்றை நடத்தும் திறன், இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்களுக்கே உள்ளது' என சுதந்த தேரர் மேலும் கூறினார். 

4 comments:

  1. We Muslims must be careful in what we speak. Cos these racists belonging to terrorists organisations like the BBS are waiting for something from us. They want to make it a big issue and become heroes. They are now zero. Trying to become hero. We should be careful

    ReplyDelete
  2. ஆசாத் சாலி நாவை அடக்கி மூளையை திறந்து செயற்படுத்துவதுதான் சமூதாயத்துக்கு நல்லது

    ReplyDelete
  3. இப்படியான மடையர்களை சமூகத்தலைவர்களாககொண்டிருப்பது இலங்கை முஸ்லிம்களின் சாபாக்கேடு

    ReplyDelete
  4. இப்படியான மடையர்களை சமூகத்தலைவர்களாககொண்டிருப்பது இலங்கை முஸ்லிம்களின் சாபக்கேடு

    ReplyDelete

Powered by Blogger.