Header Ads



பதிவு செய்யாமல் வெளிநாட்டு தொழிலுக்கு சென்றால், நாம் பொறுப்பேற்கமாட்டோம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யாமல் வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் பணியகம் பொறுப்புக்கூறமாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில் புரிந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளானவர்களுக்கு மற்றும் அங்கு மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு  நஷ்டயீடு வழங்கும் நிகழ்வு இன்று பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வெளிநாட்டுக்கு தொழிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வருடத்துக்கு ஒருமுறை பதிவுசெய்து கொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்து செல்வதன் மூலம் அவர்கள் அங்கு ஏதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளை பொறுப்புடன் செய்துகொடுக்கலாம்.

அத்துடன் ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோர் அங்கு பிரச்சினைகளுக்கு ஆளாகும் போது அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர பணியகம் எந்தவகையிலும் தலையீடு செய்யாது. அவ்வாறு அவர்களை அழைத்து வருவதென்றால் அதற்குரிய செலவுகளை அவர்கள் பொறுப்பேற்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது துதரகங்களில் அமைந்திருக்கும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

மேலும் பதிவுசெய்யாமல் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித கடத்தல் நாடுகளின் பட்டியலில் எமது நாடும் இடம்பெற்றுள்ளது. இது எமக்கு பாரிய பிரச்சினையாகும்.

எனவே வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் எமது பணியகத்தில் பதிவு செய்து விட்டு செல்வதன் மூலம் அவர்களுக்கு அங்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு நாடு திரும்பவேண்டி ஏற்பட்டால் அவர்களுக்கு போதுமான நஷ்டயீட்டு தொகை பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியில் இருந்து பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு அங்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு வழங்கப்படவேண்டிய காப்புறுதி தொகையும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

3 comments:

  1. பதிவு செய்தால் மட்டும் என்ன கிழிக்கப்போகிறார்கள்

    ReplyDelete
  2. வருடத்துக்கு ஒரு முறை எப்படி பதிவு செய்வது?
    Bureau வருடத்துக்கு ஒருமுறைதான் செலுத்துவம்!
    2 அல்லது 3 வருட ஒப்பந்தத்தில் வந்து வேலை செய்யும் நாம் எப்படி பணியகத்தில் பதிவு செய்வது?
    தெளிவாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்

    ReplyDelete
  3. Padivu senjita mattum ivaga kili kili nu kilichchuruwaaga paaru.

    Embassy la vetchi eppidi da nammakitta irundu aataya podradhu nu paakura kedu ketta naayunga. Ivaga namakkaga paadu paduwaagala??? sema comedy.

    Airport, Embassy, Training nu solli podhu makkalta irundu evalovu ellam arukka mudiyuMO avalovellam arukuradhu idhula idhu vera.

    ReplyDelete

Powered by Blogger.