Header Ads



கோத்தபாயவின் குடியுரிமை, ரத்துச் செய்யப்படும் - மங்கள


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு மிக் விமானங்கள் நான்கு கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்துச் செய்யப்படலாம் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தற்போது வரையில் மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா விமானப்படையின் சட்டப் பணிப்பாளரின் விடயங்களை கேட்டு அறிந்த கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 25ம் திகதி இது சம்பந்தமாக விபரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.