Header Ads



உவைஸிக்கு சிக்கல்

அசாதுதீன் ஒவாய்சியின் எம்.ஐ.எம். கட்சிக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அம்மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மஜ்லிஸ்-இ-இத்தெஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்.) கட்சி, நாட்டின் பிற மாநிலங்களிலும் தடம்பதிக்க முயன்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2012-ம் ஆண்டு நடைப்பெற்ற நான்டெட் நகராட்சி தேர்தலில் 81 வார்டுகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வெற்றிப்பெற்றது.

இதேபோல் அடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள பிர்ஹான்மும்பை நகராட்சி தேர்தலிலும் போட்டியிட எம்.ஐ.எம். கட்சி ஆர்வாக இருந்தது. இந்நிலையில் வருமான வரி கணக்கு உட்பட பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி எம்.ஐ.எம். கட்சியின் அங்கீகாரத்தை அம்மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாகவும், இதற்கு பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்றும் எம்.ஐ.எம். கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

எம்.ஐ.எம். கட்சியை தவிர 191 பிற கட்சிகளின் அங்கீகாரமும் பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.