Header Ads



"சுதந்திரக் கட்சியை, பிளவுப்படுத்தினால் நீக்கப்படுவார்கள்"

மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச உட்பட அவர்களது அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தினால், அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தொகுதி அமைப்பாளர்களாக இருந்து கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு பதிலாக கட்சிக்கு நேர்மையான புதிய இளம் தலைவர்கள் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இரண்டாவது நடவடிக்கையாக, சுதந்திரக் கட்சியில் உயர் பதவிகளை வகித்து கொண்டு கட்சிக்கு எதிராக செயற்படும் அனைவரும் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளனர். அவர்களின் இடத்திற்கு சிரேஷ்ட மற்றும் திறமையான பிரபலமான தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மூன்றாவது நடவடிக்கையாக மகிந்த உள்ளிட்ட குழுவினர் முன்வைக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்பதில்லை எனவும் அவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை எனவும் கட்சி தீர்மானித்துள்ளதாக துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mt Thuminda, how long have been telling the same sentance???
    Eleminate them immediately....

    ReplyDelete

Powered by Blogger.