Header Ads



இலங்கைச் சபாநாயகரிடம், மன்னிப்புக்கோரிய எமிரேட்ஸ்


மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு அனுமதி வழங்காமை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய, எமிரேட்ஸ் எயார்லைன்ஸுக்கு எதிராக, ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நடந்த தவறுக்கு வருந்துவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக அண்மையில் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த சபாநாயகர், தம்முடன் இலங்கையின் வைத்தியசாலையில் இருந்து விடுகை பத்திரத்தை பெற்று வரவில்லை என்று கூறி, எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் அவருக்கான பயண அனுமதியை மறுத்தது.

இதனையடுத்து 10 மணித்தியாலங்களுக்கு பின்னரே அவர் மட்டும் ஒரு விமானத்தில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

நோயாளியின் நிலையை கருத்திற்கொண்டு அவருக்கான பயண அனுமதியை தமது நிறுவனம் வழங்கிவருகிறது.

இந்த நிலையில் கரு ஜெயசூரியவின் நிலையைக் கருத்திற்கொண்டே அவருக்கான பயண அனுமதியை மறுத்ததாக எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தத்தை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் நிறுவனம், நோயால் பாதிக்கப்பட்டிருந்த சபாநாயகரின் நலனைக் கருத்திற்கொண்டே அவருக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.