Header Ads



இலங்கையின குட்டி யானை, நியூஸிலாந்து செல்ல தடை - நீதிமன்றம் அதிரடி

நந்தி எனும் யானை குட்டியொன்றை நியூஸிலாந்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்ம விஜய அமைப்பு தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்த பின்னர் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

பின்னவளை யானைகளின் சரணாலயத்தில் இருக்கின்ற நந்தி எனும் யானை குட்டியொன்றை நியூஸிலாந்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை குட்டிகளை வெளிநாடுகளுக்கு அன்பளிப்பு செய்வதை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்த தர்ம விஜய அமைப்பு,

இது வனவிலங்குகள் தொடர்ப்பான சட்டத்தை மீறும் ஒரு செயலென்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே இந்த அன்பளிப்பை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த புகார் குறித்து ஆகஸ்ட் முன்றாம் தேதி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்குமாறு மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.

அதுவரை சம்பந்தபட்ட யானைக் குட்டி தொடர்ப்பாக எந்த விதமான தீர்மானங்களையும் எடுக்க வேண்டாமென்று நீதிபதிகள் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டனர்.

1 comment:

  1. அப்படி என்றால் நியூ ஸிலாந்தில் இருந்து பால் கறக்கும் பசுமாடுகள் மற்றும் பல நாடுகளில் இருந்து zoo விட்கு கொண்டு வரப்பட்ட விலங்குகள் அனைத்தையும் திருப்பி அனுப்பிவிடுங்கள் !!!!!!!!!.என்ன ஒரு சட்டம் ??????????

    ReplyDelete

Powered by Blogger.