Header Ads



ஆலிம்களின் கண்ணீரில், கரைந்து கொண்டிருக்கும் நிர்வாகிகள்..!

-அஷ்-ஷேக் இர்ஷாத் மூமீன்-

இலங்கை வாழ் சுமார் 10000 க்கும் மேற்பட்ட ஆலிம்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அறபு மத்ரஸாக்களினதும் பள்ளிவாசல்களினதும் நிர்வாகங்களின் கீழ் பணி புரிபவர்களே. பள்ளிவாசல்களினதும் அறபு மத்ரஸாக்களினதும் நிர்வாகிகளைப் பொறுத்தவரை அவர்கள் செல்வந்தர்களாகவே இருக்க வேண்டும் என்பது இந்த நாட்டடின் எழுதப்படாத விதியாகிப் போனது. 

பள்ளிவாசல்களின் நிர்வாகத் தெரிவு வரும்போது நிர்வாகிகளின் தகமைகள் பற்றி அனல்பறக்கும் பேச்சுக்கள் மிம்பர் மேடைகளை அலங்கரிப்பதும் இந்த நாட்டின் சடங்குகளில் ஒன்றாகிப்போனது. தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டில் சமீப காலமாக பள்ளிவாசல்களிலும் அறபு மத்ரஸாக்களிலும் பணிபுரியும் உலமாக்கள் மழ்லூம்களாகவும் நிர்வாகிகள் ழாலிம்களாகவும் ஆகிப்போனார்கள். பெருநாள் தினங்களில் எல்லோரும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும்போது பள்ளி ஹஸ்ரத் மட்டும் பள்ளிவாசலில் அடைகாத்துக் கொண்டிருக்கவேண்டும் என்று சட்டம் வைத்திருக்கும் நிர்வாகிகளையே ழாலிம்கள் என்கிறேன். கண்ணியமாக வாழ்ந்த எத்தனையோ ஆலிம்களை பூமாலை போட்டு வரவேற்று பல வருடங்கள் சாறாகப் பிழிந்து பணி செய்ய வைத்துவிட்டு மிம்பரில் பேசிய இரண்டு வார்த்தைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் படுதூறி கூறி அடியாட்களை வைத்து பயமுறுத்தி ஊரை விட்டும் துரத்திய நிர்வாகிகளையே ழாலிம்கள் என்கிறேன். 

கையெழுத்துக்கூட போடத்தெரியாத எத்தனையோ கூலித்தொழிலாழிகள் காலையில் வேலைக்கு வந்து 8 மணிநேரம் வேலை செய்துவிட்டு மாலையில் 1000 ரூபாய் சம்பளத்தோடு வீடு திரும்பிவிடும்போது நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பளத்தோடு 24 மணிநேர பணிசெய்ய வைத்துவிட்டு 27 நாட்கள் குடும்பத்தை விட்டும் பிரித்து பள்ளியில் தனியாக தங்க வைத்து மாதம் முடியும்போது முனங்கி முனங்கி 3 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு ஒரு நாள் மேலதிகமாக விடுமுறை எடுத்ததற்காக உறுமும் நிர்வாகிகளையே ழாலிம்கள் என்கிறேன். 

 எல்லாப் பிள்ளைகளும் த்றீ வீலரில் பாடசாலை போகிறார்கள். நானும் தம்பியும் தினம் நடந்து சென்று கால்கள் வலிக்கிறது வாப்பா. எங்களையும் த்றீ வீலரில் அனுப்புங்க வாப்பா என்று குழந்தைகள் கெஞ்சும்போது தான் வாங்கும் சம்பளத்தை நினைத்துப்பார்த்து உள்ளத்தால் அழுதுகொண்டிருக்கும் வாப்பாமார்களான ஆலிம்களை தமது மஸ்ஜித்களில் இமாம்களாக வைத்திருக்கும் நிர்வாகிகளையே ழாலிம்கள் என்கிறேன். ழாலிம் என்றால் அநியாயம் செய்பவன் மழ்லூம் என்றால் அநியாயம் இழைக்கப்பட்டவன் என்று அர்த்தம். அன்புள்ள நிர்வாகிகளே! மழ்லூம்களான ஆலிம்களின் கண்ணீரில் ழாலிம்களாக கரைந்து போவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். 

 பட்டம் பதவிகளுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து கொண்டு மஸ்ஜித்களிலும் மத்ரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்களின் பிரச்சினைகளை கண்டும் காணாததுபோல் நடந்துகொள்ளும் ஆலிம்களே! நீங்களும் கியாமத்தில் விசாரிக்கப்படக்கூடும் என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.

4 comments:

  1. இன்றைய நிலைக்கு ஒவ்வொரு முஸ்லலிமும் தனித்தனியே கட்டாயம் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும்.இவ்வாறான நிலை மென்மேலும் அதிகரிக்கும் போது இஸ்லாமிய கல்வியை கற்ற அறிஞரகளின் ஈடுபாடு குறைந்து இஸ்லாமிய அறிவற்ற ஒரு இஸ்லாமிய சமூகமாக மாற வேண்டிய நிலையும் பள்ளிகள் வெறும் கட்டிடஙகளாக மாத்திரம் மாறிவிடும் நிலையும் தோன்றிவிடும்.ஒரு சமூகத்தின் அழிவும் இந்த செல்வந்தர்களின் மூலமாக நிழ்கின்றது.

    ReplyDelete
  2. அனைத்து இமாம்கள் ,முஅத்தின்களுக்கான நலன்கள் பேணும் காரியாலயம் அமைக்கப்பட வேண்டும் .அவர்களுக்கான சம்பளம் அங்கேயே வழங்கப்பட வேண்டும் .பள்ளிவாயல்கள் மாதாந்த சந்தா அட்டைகளை பயன்படுத்தி சேகரிக்கப்படும் நிதிகள் அனைத்தும் மேட்குறிப்பிட்ட நிறுவனத்தினடம் வழங்கப்பட வேண்டும் .சம்பள அதிகரிப்பு வேலைகளை இந்த நிறுவனமே கையாள வேண்டும் .இதன் மூலம் இமாம்கள் ,முஅத்தின்களின் கடமைகளை வரையறை செய்ய முடியும் .மேலும் தங்களுக்கான கொடுப்பனவுகளை கௌரவமான முறையில் பெற்றுக்கொவார்கள் .மேலும் இமாம்கள் முஅத்தின்களை நேர்முக பரீட்சை மூலம் தெரிவு செய்யலாம் .இன்னும் பல்வேறு பட்ட நன்மைகள் இதன்மூலம் ஏட்படலாம்

    ReplyDelete
  3. Shall I tell you something
    Take some mosques admin to court
    Then it will name and shame
    So all imams and muzasin will their right
    EPF will pay all money back to them

    Do it one time
    I told this some

    ReplyDelete
  4. I like to ask our community whether delivering sermons on friday and conducting five times prayers at a mosque is a JOB or SERVICE?? While begging is haram in Islam, most of these Aleems have been forced to beg from so called Trustees. Month of Ramadan is the peak month for collections by mosques and no body knows where those monies go? I know one mosque in chilow road, periyamulla, Negombo, charge 500 from each muslim who takes Kanchi from this mosque. In fact, Islam is being sold for money in almost all the mosques and Religion has become a business now like in other religions.

    Coming to the problems of mosque workers, I think they should be allowed to work part-time job or do business in their own, so that they don't have to depend on others.

    The Voice of Muslims.

    ReplyDelete

Powered by Blogger.