Header Ads



அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக, முரளி செயற்பட அனுமதித்திருக்கமாட்டேன் - அர்ஜுன


நான் கிரிக்கெட் நிறுவனத்திலிருந்திருந்தால் முரளி அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக செயற்பட அனுமதித்திருக்கமாட்டேன் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று சேவ் த ஸ்போர்ட் விளையாட்டு நிறுவனத்தினால் ஒழுங்குச் செய்யப்பட்டிருந்த மாதாந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுசந்த பர்னாந்து மற்றும் விளையாட்டு ஆலோசகர் பி.எல்.எஸ். பெரேரா ஆகியோர் கலந்து கொண்டார்கள். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் குறிப்பிடுகையில்,

'நான் முரளிதரன் என்றால் அவ்வேலையினை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முரளிதரன் அவ்வேலையை ஏற்றுக்கொண்டுள்ளார். அது சரியா, தவறா என்பதனை நாம் பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும்.

நான் காணும் ஒரு பக்கம் தான் இதன் மூலமாக அவுஸ்திரேலியாவினால் எம்மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் அதாவது முரளி பந்தை மிகவும் சுழற்றி வீசுகின்றாரென குற்றஞ்சாட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் இன்று முரளிதரனை தங்களுடைய பயிற்றுவிப்பாளராக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

இதன் மூலமாக நாம் செய்தது சரி என்பதனை உலகிற்கு ஒப்புவித்துள்ளோம். அவுஸ்திரேலியாவுடன் குறுகிய கால ஒப்பந்தமொன்றினை மேற்கொள்வதன் மூலமாக முரளி வெற்றிக் கண்டுள்ளார்.

ஆனால் இப்பிரச்சினையின் மறு புறத்தை பார்த்தோமேயானால் கிரிக்கெட் சபை தேர்தல்களின் பின்னர் உலக கோப்பையை வென்ற பல கிரிக்கெட் வீரர்கள் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சமிந்த வாஸை , உப்புல் சந்தனவை நீக்கியுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக செயற்பட வேண்டும் என முரளி என்னிடம் கேட்பாராயின் நான் அவரை அங்குச்செல்ல அனுமதிக்கமாட்டேன் என அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்

1 comment:

  1. But Murali replied very well in his way...to the Ausis & the idiot heading SLC.
    When this gang out of the SLC then only Sri Lanka cricket will grow up...

    ReplyDelete

Powered by Blogger.