Header Ads



கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான் (மன்னிக்கவும்..)


கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான்... மன்னிக்கவும் உணவுதான்!. ஆனால் இது முற்றிலும் உண்மை. பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், 'கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய உணவாக மாறலாம்' என கண்டுபிடித்துள்ளனர்.

அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. Diploptera punctate என்னும் பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களது குஞ்சுகளுக்கு உணவாக ஒரு வித பாலை சுரக்கிறது. இதிலிருந்துதான் புரோட்டீன் படிகத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த பூச்சிகளின் பாலில் இருந்து எடுக்கப்படும் உப்புகளில் உள்ள புரோட்டீன், எருமைப் பாலில் இருக்கும் புரோட்டீனை விட 3 மடங்கு அதிகமாகவும், பசுவின் பாலை விட அதிக கலோரி நிறைந்ததாகவும் இருப்பதாக தங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மேலும், “இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. பசுவின் பாலை விட 4 மடங்கு அதிக சத்து மிக்கதாக உள்ளதால் வருங்கால சந்ததியினரின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்“ என ஆய்வுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஆசிரியர் அவர்களே,
    அப்படித்தான் அவர்கள் சொன்னாலும் அதை நீங்கள் நம்பி இங்கு பிரசுரிக்கிறீர்களே! வெட்கமாக இல்லையா? இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தல்லவா இது!
    தாய்ப்பால், பசுப்பாலை விடவும் கரப்பான் பூச்சிப் பால் சுத்தமான பாலா? உங்களுக்கே அருவருப்பாக இல்லையா? குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான கருத்துக்களை பிரசுரிப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள்!
    வாசகன் என்ற முறையில் இதற்கு உங்களுடைய விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.