Header Ads



இலங்கை ஹாஜிகளின் நலன்களை கவனிக்க விசேட திட்டம்

-விடிவெள்ளி ARA.Fareel-

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டையும் இலங்கை ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­திலும் உத­விகள் வழங்­கு­வ­திலும் சவூதி அரே­பியா ரியாத்­தி­லுள்ள இலங்கை தூத­ர­கமும் ஜித்­தா­வி­லுள்ள கொன்சியூலர் அலு­வ­ல­கமும் முக்­கிய கவனம் செலுத்தும் என ஜித்­தா­வுக்­கான கொன்சியூலர் நிய­மனம் பெற்­றுள்ள பைசல் மக்கீன் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கொன்சியூலராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பைசல் மக்கீன் எதிர்­வரும் 30 ஆம் திகதி நாளை ஜித்­தா­வி­லுள்ள அலு­வ­ல­கத்தில் தனது கட­மையைப் பொறுப்­பேற்­க­வுள்ளார்.

கொன்சியூலர் பைசல் மக்­கீ­னுக்கும் அரச ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம் மாலை முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சில் நடை­பெற்­றது.

அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தலை­மையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு உறு­தி­ய­ளித்தார். அவர் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டலில் விளக்­க­ம­ளிக்­கையில்,

 இலங்­கை­யி­லி­ருந்து சவூதி சென்­ற­டையும் ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்­கான சகல உத­வி­க­ளையும் ரியாத்­தி­லுள்ள இலங்கைத் தூத­ரக அதி­கா­ரி­களும் ஜித்தா கொன்சியூலர் அலு­வ­லக அதி­கா­ரி­களும் வழங்­கு­வார்கள்.

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் பய­ணி­களை ஏற்றிக் கொண்டு ஜித்தா விமா­ன­நி­லையம் சென்­ற­டையும் ஒவ்­வொரு விமா­னத்தின் ஹஜ் பய­ணி­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக 2 அதி­கா­ரிகள் வீதம் விமான நிலை­யத்தில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.

அவர்கள் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பய­ணப்­பொதி கையாளல் உட்­பட அனைத்து விட­யங்­க­ளிலும் உதவி வழங்­கு­வார்கள். தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கு­வார்கள்.

இதனால் ஹஜ்­ஜா­ஜிகள் விமா­ன­நி­லை­யத்தில் அதி­க­நேரம் தரித்­தி­ராது. தமது கட­மை­களை முடித்துக் கொண்டு வெளி­யேறக் கூடி­ய­தாக இருக்கும்.

இலங்கை ஹஜ்­ஜா­ஜி­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு விசேட அடை­யாள சின்­ன­மொன்றும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அவர்கள் அதனை தங்­க­ளது கரங்­களில் அணிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஹஜ்­குழு உறுப்­பி­னர்­களும் ஹஜ் குழுத்­த­லை­வரும் கொன்சியூலரின் நிய­ம­னத்­துக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­தனர்.

ஹஜ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தும் கொன்சியூலர் சவூதி அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொண்டார்.

No comments

Powered by Blogger.