July 17, 2016

யுத்தக் குற்றவாளி டொனி பிளேயரும், ரணிலின் UNP அரசாங்கமும்

-லத்தீப் பாரூக்-

டொனி பிளாயர், சில்கொட் அறிக்கையும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசும்

சுமார் 24 தேர்தல்களில் தோல்வியடைந்த பின்பு ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்தது. மகிந்த ராஜபக்ஷ அரசின் கெடுபிடிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கில் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஐ.தே.கவுக்கு வாக்களித்தது.
ஆனால் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு ஐ.தே.க தலைமையிலான அரசு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான காட்டுமிராண்டித் தனமான யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட யுத்த வெறியர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் கைகோர்த்தது. இந்த நாடுகள் இலட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து பல முஸ்லிம் நாடுகளை நிர்க்கதி நிலைக்கு கொண்டுவந்துள்ளன.
இந்தக் கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் யுத்தக் குற்றவாளியான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரை 2015ல் இரண்டு வார கால தனிப்பட்ட விடுமுறை விஜயத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சரும் அழைப்பு விடுத்திருந்தார்.
இது இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல அவமானத்தையும் ஏற்படுத்தியது. அணிசேரா இயக்கத்தின் பெருமைக்குரிய குரலாகவும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாவல் குரலாக அச்சமின்றி உலகம் முழுவதிலும் மூன்றாம் மண்டல நாடுகளின் அமர்வுகளிலும் இலங்கையின் குரல் ஒரு காலத்தில் ஒலித்தது.
நாட்டின் புத்தி ஜீவிகளினதும் முஸ்லிம் மக்களினதும் உணர்வுகளைப் புறக்கணித்து யுத்தக் குற்றவாளி டொனி பிளாயரை இலங்கைக்குள் வர அனுமதித்ததன் மூலம் நல்லாட்சி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குலையத் தொடங்கியது.
ஆனால் இதுவொன்றும் எதிர்ப்பார்க்கப்படாத விடயமும் அல்ல. காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அன்றைய அரசு தான் பெரும்பாலும் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பை கண்டிக்கத் தவறிய ஒரேயொரு மூன்றாம் உலக அரசாகும். இந்த ஆக்கிரமிப்பை கண்டிக்குமாறு அன்றைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்ட போது அரசில் இருந்து வெளியேற அதைச் செய்யுமாறு அவர் பதில் அளித்தார்.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்றமை பற்றி தற்போது வெளியாகியுள்ள சேர். ஜோன் சில்கொட் அறிக்கையில் டொனி பிளாயரின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. சில்கொட் ஒரு முன்னாள் பிரிட்டிஷ் அரச சேவை அதிகாரியாவார். முன்னாள் பிரதமர் டொனி பிளாயர் எவ்வாறு பிரிட்டனை ஈராக் யுத்தத்துக்குள் இழுத்தார் என்பது பற்றி ஆராய முன்னாள் பிரதம மந்திரி கோர்டன் பிரவுன் இவரை நியமனம் செய்திருந்தார்.
அமெரிக்க சியோனிஸ யுத்தக் குற்றவாளியான ஜேர்ர்ஜ் புஷ்ஷினால் தீட்டம் தீட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஈராக் யுத்தத்தில் பிரிட்டிஷ் யூத குற்றவாளியான டொனி பிளாயரும் பங்கேற்றார். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வடிவமைப்பை மாற்றி அங்கு அகண்ட இஸ்ரேல் ராஜ்ஜியத்தை உருவாக்கி அவர்களின் மேலாதிக்கம் ஓங்க வழியமைப்பதுதான் இந்த யுத்தத்தின் நோக்கம்.
இந்த அர்த்தமற்ற ஆக்கிரமிப்பை உலக நாடுகள் பல எதிர்த்தன. 1991 ல் ஈராக் விமான சூனிய வலயம் என்ற போர்வையில் ஏற்கனவே மூன்றாகத் துண்டாடப்பட்டிருந்தது. அதன் ஆயுதங்கள் பல ஏற்கனவே அழிக்கப்பட்டிருந்தன. படையினர் பலவீனப்படுத்தப்பட்டிருந்தனர். ஈராக்கின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டிருந்தது. பொருளாhரத் தடைகளால் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கரலின் லூகாஸ் டொனி பிளாயர் ஒரு யுத்தக் குற்றவாளி என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். நாம் அறிந்து வைத்துள்ளதை சில்கொட் அறிக்கையும் உறுதி செய்யுமானால் டொனி பிளாயர் பொய் உரைத்து இந்த நாட்டு மக்களையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழி நடத்தி உள்ளார் என்பதும் நிரூபணமாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிளாயரும் புஷ்ஷும் ஈராக்கிய பொது மக்களுக்கு மரணத்தை விளைவித்தனர். அந்த நாட்டின் தண்ணீர் மின்சாரம் சுகாதாரம் மருத்துவம் கல்வி போக்குவரத்து தொலைத் தொடர்பு என அத்தியாவசிய கட்டமைப்புக்கள் அனைத்தையும் இவர்கள் நிர்மூலமாக்கினர். சுமார் 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மையான எண்ணிக்கை அதை விட அதிகமாகவே இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மிகவும் காட்டுமிராண்டித் தனமான சித்திரவதைகளுக்கு ஆளானர். மிக மோசமான கற்பழிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன.
கற்பழிப்புக்களுக்கு மேலதிகமாக பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டு அவைகள் பிரசுரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பலர் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்ற அச்சம் காரணமாக வாய்திறக்காமல் மௌனமாகவே இருந்து விட்டனர். பல விடயங்கள் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன.
இந்த சித்திரவதைகள் முஸ்லிம்கள் மீது குறிப்பாக அரபிகள் மீது வேரூன்றிப் போயிருந்த மேற்குலகின் இனக் குரோதத்தை படம்போட்டுக் காட்டின.
பெரும்பான்மை சுன்னி முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை ஷீஆ முஸ்லிம்களுக்கும் இடையில் அவர்கள் குரோதங்களை உருவாக்கினர்.
மனித குலத்துக்கு எதிரான அவர்களின் மற்றொரு நன்கு திட்டமிடப்பட்ட கலாசாரக் குற்றமாக அவர்களின் ஏவுகணைகள், பங்கர் பஸ்டர் குண்டுகள், ஏனைய பாரிய அழிவு தரும் ஆயுதங்கள் என்பன ஈராக்கின் சட்டரீதியான கட்டமைப்பை இரவோடு இரவாக மாற்றி நாசமாக்கின. மக்களின் பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள், காணி உறுதிகள், திருமண சான்றிதழ்கள், வர்த்தக உடன்படிக்கைகள், வாகனப் பதிவுகள், கல்விச் சான்றிதழ்கள், பாடசாலைப் பதிவுகள் என எல்லாமே அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.
ஈராக்கில் உள்ள மிகவும் பண்டைய பெறுமதி மிக்க சுமார் 17000 தொல்பொருள்கள் தேசிய நூதனசாலையில் இருந்து இந்தப் படையினரால் சூறையாடப்பட்டன. இந்தளவு நுணுக்கமாக ஈராக்கை அழிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பழம் பெருமை மிக்க ஒரு நாட்டின் எல்லா பண்புகளும் சிதைக்கப்பட்டன. அந்த நாட்டின் புத்திஜீவிகளையும் தொழில்சார் நிபுணர்களையும் அழித்தொழிக்கும் வகையில் சகல திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. பல தசாப்தங்களுக்கு அந்த நாட்டில் புத்தி ஜீவிகள் தலையெடுப்பதை தடுக்கும் வகையில் மிக நுணுக்கமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இஸ்ரேலின் இரகசிய உளவு பிரிவான மொஸாட்டால் ஈராக்கின் தொழிற்சார் நிபுணர்களும் ஏனைய புத்தி ஜீவிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கை மிக நுட்பமாக மேற்கொள்ளப்;பட்டது. தங்களுக்குத் தேவையான சுமார் 400க்கும் மேற்பட்ட புத்தி ஜீவிகளின் பெயர் மற்றும் விலாசத்துடன் வந்திறங்கிய மொஸாட் அவர்களை குறி வைத்து தேடித் தேடி மிகக் கொடூரமான முறையில் வேட்டையாடியது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தலைமைத்துவ நிறுவனத்தின் கூற்றுப்படி 'ஈராக்கின் உயர் கல்வி நிலையங்களுள் 84மூ மானவை தீக்கிரையாக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன அல்லது நாசமாக்கப்பட்டன'. ஈராக் நூதனசாலையில் 2003 ஏப்பிரலில் இடம்பெற்ற திருட்டு, தொல்பொருள் அகழ்வு நிலையங்களில் இடம்பெற்ற நூற்றுக் கணக்கான திருட்டுக்கள், நூலகங்கள் பல எரிக்கப்பட்டமை கலாசார வரலாற்று விஞ்ஞான தடங்கள் அழிக்கப்பட்டமை என்பன மிகவும் பயங்கரமான நிகழ்வுகளாகும். இவற்றுள் மிகவும் மோசமான குற்றமாக அமைந்தவை ஈராக்கின் புத்திஜீவிகள் தேடித்தேடி அழிக்கப்பட்டமையாகும்.
ஈராக்கில் ஆங்கிலோ அமெரிக்க படைகளால் மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நோக்குகின்ற போது புஷ் அவரின் குற்றவியல் பங்காளி பிளாயர் மற்றும் அவர்களின் படைகள் நாகரிகமான குடும்பங்களில் பிறந்த மனித விழுமியம், மனித உணர்வு கொண்ட கொண்ட மனிதர்கள் தானா என்றே எண்ணத் தோன்றுகின்றது.
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் பிரதி தலைவரும் இலங்கையின் தலைசிறந்த நீதித்துறை நிபுணருமான சி.ஜி.வீரமன்திரி இதுபற்றி கூறுகையில் 'எந்தவிதமான ஒழுக்க விழுமியங்களும் சட்ட நியாயங்களும் இன்றி ஆங்கிலோ அமெரிக்க கூட்டணி தமது படைகளை ஈராக் யுத்தத்துக்குள் இழுத்து வந்தது. பெரும் பாவக் கறைகளை சுமந்தவர்களாக பக்தாத்துக்கு சட்ட விரோதமான பாதையிலேயே அவர்கள் சென்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய யுத்தக் குற்றவாளி பிளாயர் தான் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு ஜனாதிபதி பிரதமர் ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவரது இருவார கால விஜயத்தின் முடிவில் லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரை வழங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டு இந்த நாட்டு மக்களின் உணர்வுகள் மேலும் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டின் இன முறுகல் நிலைப்பாடுகள் பற்றி பேசுவதற்கு பிளாயர் போன்ற ஒரு யுத்தக் குற்றவாளி இந்த நாட்டுக்கு அவசியமா?
ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் நல்லாட்சி நடத்துவதாக உரிமை கோரினாலும் அவர்கள் இன்னமும் பழைய நிலையில் தான் உள்ளனர் என்பதற்கு இது மிகத் தெளிவான சான்றாகும். இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைமையிலான மேற்குலக யுத்த வெறியர்களிடம் அரசு அடகு வைத்து விட்டது. அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய யுத்த வெறியர்களுடனான பிரதமரினதும், வெளிவிவகார அமைச்சரினதும் அளப்பரிய காதல் ஏன் என்பது தான் இன்னும் புரியவில்லை. ஒரு யுத்த குற்றவாளி இந்த நாட்டுக்கு அழைக்கப்பட்டதன் காரணம் மர்மமாகவே உள்ளது.
அமெரிக்காவுடனும் ஏனைய யுத்த வெறியர்களுடனும் அரசு கூடிக் குளவிய போதிலும் எதிர்பார்த்த முதலீடுகள் எதுவும் நாட்டுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. மாறாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களால் வருடாந்தம் அனுப்பப்படும் ஏழு பில்லியன் ரூபாய்களால் தான் இந்த நாட்டின் பொருளாதாரம் வலுவூட்டப்படுகின்றது.
வளைகுடா மட்டும் அல்ல முழு முஸ்லிம் உலகும் அங்குள்ள சர்வாதிகாரிகளை தவிர இஸ்ரேலுடன் ஒத்துழைத்து அமெரிக்க தலைமையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இடம்பெறும் பிரசாரங்களை மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகர சனத்தொகையில் முக்கால் பங்கை மட்டுமே கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு முழு முஸ்லிம் உலகையும் பகைத்துக் கொள்ள முடியுமா என்பதே இங்கு எழுப்பப்படும் முக்கியமான கேள்வி. முஸ்லிம் உலகம் இன்னமும் இலங்கையை மிகச் சிறந்த நட்பு நாடாகவே பார்க்கின்றது.

2 கருத்துரைகள்:

Ulaka.vallaru.nadukalodu.unkalakku.vella.mudiyathu.ninka.srilankavil.10.preicent.erunthu.kondu.ninka.sonna.arasankam.seiuma.summa.kenaththanma.jaffna.muslim.enayaththalam.news.podukinrathu.ranil.mattum.support.pannavillai.unkaludaya.arab.nadu.mukkiya.panku.vahiththathu.iraq.sandai.poduvathukku.sadam.huasainodu.arab.nadukalukku.viruppam.ellai.ninka.srilankavil.konja.per.erunthukondu.kothikkirankal.iraq.sandai.natakkum.poluthu.ninka poi.american.miltry.odu.sandai.pidichchi.erukkalame

Sritharan Sri<
உலக வல்லரசுகளெல்லாம் ஒருநாள் இஸ்லாத்தின் கீழ் வந்தே தீறும். ஆனால் அந்நாளில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்திற்கு மாறிக்கொண்டு வருவதே உங்களுக்கான சாட்சிகளாகும்.

Post a Comment