Header Ads



பிரதமருடன் இடம்பெற்ற பரிவர்த்தணையாலே, விமல் வெளியே உள்ளார் - டிலான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகம் அவதானம் செலுத்துவது யார் குறித்து என்பது தொடர்பில் தௌிவில்லை என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதாகவும், அவர் கடந்த காலங்களில் அவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, எனினும் அது குறித்து ஏனையோருக்கு எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று -22- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், ஜனாதிபதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை விட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருடனேயே கலந்துரையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, பஷில் ராஜபக்ஷ மீதான வழக்கு குறித்து இதன்போது ஊடகவியலாளர் வினவியதற்கு "இது முட்டாள்தனமான வழக்கு" என அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த வழக்கு ஊழல் வழக்கு போன்று தனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், குமார் குணரத்னம் மற்றும விமல் வீரவங்ச ஆகியோர் ஒரே மாதிரியான வழக்கையே எதிர்கொண்டனர், எனினும் குமார் குணரத்னம் சிறையில் உள்ளார் விமல் வீரவங்ச வௌியில் உள்ளார் என, இதன்போது குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, இதற்குக் காரணம் கட்சிக்குள் அல்ல பிரதமருடன் இடம்பெற்ற பரிவர்த்தணையே எனவும் கூறியுள்ளார். 

"எங்கும் இருப்பது டீல் தான்" எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.