Header Ads



ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை - மதவாத மோடி அரசு தீவிரம்


இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், 

ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றார். 

3 comments:

  1. India is creating another Drama against Islamic intellectual

    ReplyDelete
  2. Islam teeviravatathtai ethirkirathu enral Dr.zakir nayak um atahitan solkirar.

    ReplyDelete
  3. banala nadagam zakir target panni modi asina nadathi ullargal uk canada pala nadugal co.makkal sathiyathin pakkam varuvathai thaduka

    ReplyDelete

Powered by Blogger.