Header Ads



இலங்கை முஸ்லிம்களின், பாரிய தவறு..!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

மொரோகோவிலிருந்தும் யெமன் ஹழ்ரமௌதிலிருந்தும் வந்த சில வியாபாரிகளால் அன்று இலங்கையில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து அதன் எண்ணிக்கை இன்று இருபது லட்சத்தையும் தாண்டியுள்ளது 

ஆனால் இன்று பல இயக்கங்கள் , ஜமாஅத்துக்கள் , தஃவா நிறுவனங்கள் , சங்கங்கள் , அமைப்புக்கள் , ஒன்றியங்கள்  பல ஆயிரம் பள்ளிவாசல்கள் , பாடசாலைகள் மத்ரஸாக்கள் , பல்லாயிரம்  உலமாக்கள்   , ஆசிரியர்கள் , துறை சார் நிபுணர்கள் , என்று விரிவடைந்த இலங்கை முஸ்லிம்களுக்கு கேவலம் பிரமத சகோதரர்களுக்கு ஹலால் என்றால் என்ன ? ஹராம் என்றால் என்ன ? என்ற வாழ்வின்  சிறியதொரு முக்கிய அம்சத்தைக் கூட தெளிவுபடுத்த  மறந்து போய்விட்டது 

ஒழுக்க விழுமியங்களை அணிகலனாகக் கொண்டு செய்யும் தொழிலை இஸ்லாமிய முறைப்படி செய்தாலே இஸ்லாம் தானாக இந்த  பூமியில் மலரும் என்பதை மொரோகோவிலிருந்தும் யெமனிலிருந்தும் வந்த சில வியாபாரிகள் செய்து காட்டினர்

தற்போதைய இலங்கைச் சோனகர்கள் என்ற அவர்களின் சந்ததியினர் பிற மத சகோதரர்களுக்கு சொல்லவேண்டியதை இத்தனை இஸ்லாமிய அமைப்புக்களும் இஸ்லாத்தின் உறுப்பினர்களும் இருந்தும் கூட வாழ்க்கையால் அல்ல வாயால் கூட சொல்லத் தவறிவிட்டனர் என்பதே கவலைக்குரிய விடயம் 

குறிப்பு : ஹிஜாஸிலிருந்தும் மேலும் அப்பாஸிய ஆட்சியின் போதும் ஒரு சில ஆத்மஞானிகளும் இலங்கைக்கு மத போதனைக்காக வந்துள்ளனர் என்பதும் வரலாற்று சுவடுகளில் உண்டு.

2 comments:

  1. உண்மை அதுதான் இதுவரையும் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் மாற்றுமத சகோதரர்களுக்கு சொல்லாலும் செயலாலும் அறிவிக்கப்படவில்லை காரணம் முஸ்லிம்கள் ஆகிய நாம் கொள்கை வாரியாக பிரிந்து இருப்பதுதான் இதற்கான பிரதான காரணம் இயக்கங்கழுக்கு ஏற்றாப்போல் இஸ்லாத்தை மாற்று மதத்தவர்களுக்கு சொல்லும்போது அவர்களை குழப்பமடைய செய்கின்றதுஅதனால்தான் காலப்போக்கில் அவர்கள் நம்மீது நம்பிக்கை இழந்து சந்தேகம் அடைகின்றார்கள் நன்கு படித்த மாற்றுமத சகோதரர்களும் இதில் என்ன மர்மம் என்று சிந்திக்கும் வழிகள் தோன்றியுள்ளது இதன் காரணமாகத்தான் இஸஸ்லாமிய அடிப்படைவாதிகள் ,பழைய இஸ்லாமியவாதிகள் என்ற பிரித்துப் பார்கும் அளவில் முஸ்லிம்களின் நிலைமை மாறிவிட்டது மட்டுமல்லாமல் உண்மையான மார்க்கம் தானா இஸ்லாம் என்ற சந்தேகத்தை உருவாக்கி தீவரவாத போக்குடைய மார்கமாக சித்தரித்து பேசு போருளாக ஆக்கப்பட்டுவிட்டது இதற்கான போறுப்பை போறுப்பு வாய்ந்த புத்தி ஜீவிகள் தவற விட்டு விட்டார்கள் என்பதே உண்மை .

    ReplyDelete
  2. எமது ஜமாஅத்துக்கள் மார்க்த்தை ஓர் வாழ்க்கையாக காட்டவில்லை. அதனை பள்ளிகளோடு முடிந்துவிடுகின்ற சில கிரியைகளாகவே காட்டிக்கொன்டிருக்கிறார்கள். இதனால் பள்ளிகளுக்குள் இருக்கும்போது முஸ்லிமாகவும் வெளி வாழ்கையில் பண்பாடற்றவனாகவும் வாழ்கின்றன்ர். பிற சமூகத்தினர் பள்ளிகளுக்குள் வருவதில்லை எமது வெளி வாழ்க்கையையே காண்கிறார்கள். எமமை விமர்சிக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.