Header Ads



கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையும், அமைச்சரின் கலாய்ப்பும்..!

கூட்டு எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக இந்த நாட்களில் ஊடகங்கள் வாயிலாக பலதரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ள கூட்டு எதிர்கட்சியினருக்கு தேநீர் வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரையை மேற்கொள்ளும் குழு வேலைவெட்டியற்று இருப்பதாலேயே பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேண்டியவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அரசியலில் உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் பாதயாத்திரை அல்ல தலையால் நடந்து வந்தாலும் தாம் எதிர்ப்பினை வெளியிடப் போவிதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் தாமும் கண்டியிலிருந்து பாதயாத்திரைகளை மேற்கொண்டதாகவும்,எனினும் அதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது போனதாகவும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.

சில குழுக்கள் கூக்குலிட்டுக்கொண்டு பாதயாத்திரையை மேற்கொண்டால்,இந்த ஆட்சியை எதுவும் செய்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவினர் 5 வருடங்களுக்காவது இவ்வாறு பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும்,ஆனால் நான்காவது வருடத்தின் இறுதியில் பாதயாத்திரைக்கு சென்ற பலரை தேட வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மழை,வெயிலில் கஸ்டப்பட்டு,நோய்களுக்கு ஆளாகி இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதன் பலன் என்வென்று புரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.