Header Ads



துருக்கியில் இராணுவ சதி வென்றிருந்தால், எர்துகான் மீது சுமத்தவிருந்த குற்றச்சாட்டு அம்பலம்

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சிக்கு முயன்றவர்கள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மீது தீவிரவாதத்திற்கு உதவியது மற்றும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றம் சுமத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

துருக்கி அரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரம் ஒன்று அரச வழக்கறிஞர் மெஹ்மத் செல்லின் ஸ்தன்பூலில் உள்ள அலுவலகத்தில் இருந்து சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரா ணுவ சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இராணுவம் வெற்றி பெற்றிருந்தால் இராணுவ சதிப்புரட்சி ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தவிருந்த குற்றச்சாட்டுகளே தற்போது வெளிவந்துள்ளது. அதில் தீவிரவாத குழுவுக்கு உதவியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றப்பத்திரத்தில் திகதி இடப்படவில்லை என்பதோடு எவரது கைச்சாத்தும் இடப்படவில்லை. எனினும் 2016 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளது.

இதில் உள்துறை அமைச்சர் எப்கான் அலா, தேசிய உளவு அமைப்பின் தலைவர் ஹகம் பிதான், மாகாண ஆளுநர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் அஹமட் டவுடொக்லு ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.