Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் முக்கிய வேண்டுகோள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை பின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத தாக்குதல்களில் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன இதனைத்தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் போது இலங்கையர்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை இலங்கையர்கள் கருத்திற்கொள்வார்களானால் அவர்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏதாவது ஓர் நாட்டில் தாக்குதல் சம்பவம் ஏற்படுமாயின் உடனடியாக இலங்கை தூதுவராலயம் ஊடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இதன் காரணமாகவே வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தம்மை தூதுவராலயங்களில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Foreign Embassies Phone Numbers are out of order for many decades specially in Gulf....What to do?

    ReplyDelete
  2. ஆனால் இங்கு இருக்கின்ற தூதரகங்களோ இலங்கையர்களுக்கன்றி அனுசரனையாளர்களுக்கே சாதகமாக செயற்படுகின்றனர். முதலில் இதனை சீர் செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. snail nathie speed udavi seyum sl.embacy velinaatu vela vaipil kasukatti vanthathu minstruku makeup podava antha antha detail anupunga vasul pannava idea summa seya maatingalay

    ReplyDelete

Powered by Blogger.