July 18, 2016

மாடறுப்பும் இறைச்சிக் கடைகளும், புதிய நடைமுறை வேண்டும்

-விடிவெள்ளி A.L.Nawfeer-

இந்த நாட்­டிலே நீண்ட கால­மாக இறைச்சிக் கடைகள் நடாத்­தப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்­கான அனு­ம­தியை உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே வழங்கி வரு­கின்­றன.

இலங்­கையில் பசு மாட்­டி­றைச்சிக் கடை 10,000 உள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. பெரும்­பாலும் முஸ்லிம் பொது­மக்­களே இறைச்சிக் கடை­களை எடுத்து நடாத்­து­கின்­றனர். பசு மாட்­டி­றைச்சிக் கடை, ஆட்­டி­றைச்சிக் கடை, கோழி இறைச்சிக் கடை என்­ப­னவும் ஒரு­சில இடங்­களில் பன்றி இறைச்சிக் கடையும் இங்கே உண்டு. பன்றி இறைச்சிக் கடை­களைச் சிங்­கள மக்­களே நடாத்­து­கின்­றனர். 

ஏழை மக்­களால் மிகக் குறைந்த விலையில் புர­தத்தைப் பெற இறைச்சி கார­ண­மாக உள்­ளது. அமெ­ரிக்­காவில் ஆண்­டொன்­றிற்கு 112 கிலோ இறைச்­சியை ஒருவர் உண்­ணு­கிறார். இந்­தி­யாவில் 2 கிலோ­வையே உண்­ணு­கிறார். இலங்­கையில் ஒருவர் சரா­ச­ரி­யாக 13 கிலோ இறைச்­சியை உண்­ணு­கிறார். இந்­தி­யாவில் கால்­ந­டைகள் பெரு­கி­விட்­ட­தா­கவும், அவற்றைக் கொல்லும் திட்டம் ஒன்றை இந்­திய சுற்றுச் சூழல் பாது­காப்பு இயக்­கங்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

 எமது நாட்­டிலும் ஒரு பசு சரா­ச­ரி­யாக 25 கன்­று­களை ஈனு­வ­தா­கவும், அதில் சரா­ச­ரி­யாக 12 கன்­றுகள் நாகு (பெண்) கன்­றுகள் என்று எழு­மா­றாக நோக்கின், அவை ஒவ்­வொன்றும் 25 கன்­றுகள் ஈனும் எனின், அவற்றில் வரும் நாகுகள் ஒவ்­வொன்றும் 25 கன்று எனின் நிலை­மையைக் கொஞ்சம் யோசிக்­கவும். மாடுகள் பல்கிப் பெரு­கி­விடும்.

அறுத்து உண்ணும் முறை இல்­லா­விட்டால் எமது நாடு மாடு மய­மா­கி­விடும். மாடு­க­ளுக்­கான உணவு, நீர், இடம், எனப் பல பிரச்­சி­னைகள் தோன்றும். எமது D.S  சேனா­நா­யக்க சமுத்­திரம் ஒரே நாளில் மாடு­களால் குடித்து முடிந்து விடும்.

மாடு ஒரு தாவர உண்ணி என்­பதால் அது மிவும் துரி­த­மாக பெரு­கி­விடும் என்­பதை விஞ்­ஞான ரீதி­யாக சிந்­திப்போர் ஏற்றுக் கொள்வர்.   இலங்­கை­யி­லுள்ள பிரா­ணிகள், கால்­ந­டைகள் பற்­றிய தகவல் (2015)


* மொத்த கால்­ந­டைகள் - cattle 1088119 * எருமை மாடுகள் - Buffaloe 323080 * பன்­றிகள் - swine 69680 * ஆடுகள் - goat 316860 * கோழிகள் - chicken 16744210 * தாறா - duck 11590 மாட்­டி­றைச்சி கடை  உரி­மை­யா­ளர்கள் அறிய

* இரத்தம் தோய்ந்த இறைச்­சியைக் காட்­சிப்­ப­டுத்­து­வதைத் தவிர்த்தல்

* கடை­களை நவீன முறையில் அமைத்தல் ( glass fitting)

*அடுத்­த­வர்கள் பார்த்­தி­ருக்கும் போது இறைச்­சியை வெட்­டு­வதை தவிர்த்து  வெட்­டுதல், சுத்­தப்­ப­டுத்­து­தல்­களை மறை­வாகச் செய்தல். அவர்கள் பார்க்கும் போது நாம் எலும்பை கொத்­துதல், இறைச்­சியை வார்ந்து எடுக்கும் போது நம்மை "இரத்த வெறி பிடித்­த­வர்கள்" என தவ­றாகப் புரிந்து கொள்­ளு­கி­றார்கள். எமது மதத்­தையும் விமர்­சிக்­கி­றார்கள்.

* இறைச்­சியைத் தனி­யாக வேறு பிரித்து ஒவ்­வொரு விலைக்கும் விற்றல்     தனி இறைச்சு, முள்­ளுடன், கொழுப்பு இறைச்சி, நரம்பு, லைன், நெஞ்சு, குடல், ஈரல், கலவன்     என்ற அடிப்­ப­டையில் பிரித்து ஒவ்­வொரு விலைக்கும் விற்றல்.( இப்­போது இவ்­வாறே விற்­கப்­ப­டு­கி­றது ஆனால் நான் சொல்­வது அதை முன்­ன­தா­கவே வேறு பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என)

*  இறைச்சிக் கடையை சுத்­த­மாக வைத்­தி­ருத்தல்

* எமக்கு பன்றி இறைச்­சியைப் பார்த்தால் வெறுப்பு வரு­வது போல் அடுத்­த­வர்­க­ளுக்கு மாட்­டி­றைச்­சியைப் பார்த்தால் வரும். எனவே அவ்­வாறு வரா­த­வாறு நாம் கடை நட­வ­டிக்­கை­களைப் பேண வேண்டும்

* வெட்டி சுத்­தப்­ப­டுத்தும் வேலை­களை மறை­வாகச் செய்தல்

* நவீன முறையில் பொதி செய்தல் (இன்றும் தேக்கு மர இலையில் சுற்றி வழங்கும் ஊர்கள் உண்டு)

* இறைச்சிக் கடையை நவீ­ன­ம­ய­மாக அமைத்தல் (modern shop)

*முக்­கி­ய­மாக அறுக்­கப்­பட்ட மாடு­களின் கழி­வு­களை பாதை­யோ­ரங்கள், ஊரின் ஒதுக்­குப்­பு­றங்கள், கண்­ட­நிண்ட இடங்­களில் வீசி விடாது ஒரு முறை­மை­யூ­டாக அகற்றல் அல்­லது கைத்­தொ­ழில்­க­ளுக்கு மூலப் பொரு­ளாக வழங்­குதல்.

* மாடு­களை அறுக்கும் போது நாட்டு சட்­டத்தைக் கடைப்­பி­டிப்­ப­துடன், எம்மைப் படைத்த இவற்றை ஹலா­லாக ஆக்­கிய எமது "அல்லாஹ்வை" நாம் பயந்து கொள்ள வேண்டும்.

கர்ப்­பி­ணிகள், சிறு கன்­றுகள், நோய்­வாய்ப்­பட்ட பிரா­ணிகள், அங்­க­வீனப் பிரா­ணி­களை, விவ­சா­யத்­திக்கு உதவும் எருமை மாடு­களை ஒரு­போ­துமே அறுக்கக்கூடாது.

இவற்றில் நாம் நிறை­யவே தவறு விடு­கிறோம். பசு மாடுகள் கன்று ஈன்று 21 நாட்­க­ளுக்குள் மீள கரு­வு­று­கின்­றன. எனவே அவை கன்­று­ட­னேயே வாழும் ஒரு நிலை உண்டு. இதை நாம் நன்கு கவ­னத்திற் கொள்ள வேண்டும். இவற்றில் நாம் தவ­றி­ழைத்து விட்டு அடுத்த சமூ­கத்தைக் குறை கூறிப் பய­னில்­லாமல் போகலாம். எனவே அவ­தா­னமும், மனி­தா­பி­மா­னமும் தேவை.

 ஒரு பிரா­ணியைக் கொல்ல அந்தப் பிரா­ணியின் நலன், அதை உண்ணும் மக்­களின் நலன் என்ற அடிப்­ப­டையில் நோக்கின் மிகவும் விஞ்­ஞான ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட முறை அதை "கழுத்தால் அறுப்­பது" தான். மற்ற எல்லா முறை­யுமே தவ­றா­ன­தா­கவே கொள்­ளப்­ப­டு­கி­றது. தோல்தான் உணர்வை அறி­யக்­கூ­டி­யது. தோல் அறு­பட்­டதும் நோவு உண­ரப்­ப­டு­வ­தில்லை என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

* அறுக்கும் நிபந்­த­னை­களைச் சரி­யாகப் பேணி அறுத்தல். பிரா­ணியின் உரி­மையை மதித்தல்

* அறுக்கும் கத்தி, இடம், அறுக்கும் நபர் தொடர்­பான இஸ்­லா­மிய நடை­மு­றை­களை கண்­டிப்­பாக கடைப் பிடித்தல்

*பிரா­ணியைக் கொண்டு செல்லும் போது கால்­நடை வைத்­தியர், கிராம சேவ­கரின் அனு­ம­தியைப் பெறல்

* ஏற்றிச் செல்­லு­வ­தற்­கு­ரிய தகு­தியை உடைய வாகனங் களில் ஏற்றிச் செல்­லுதல். (அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வாக­னங்கள்)

* ஏற்றிச் செல்ல சரி­யான முறையைப் பின்­பற்­றுதல், அள­வு­களைச் சரி­யாகப் பேணுதல், நெருக்­கப்­பட்டு கொண்டு வரு­வதைத் தவிர்த்தல்

* மாடு­களை இரவில் கொண்­டு­வ­ருதல், ஒன்­று­ட­னொன்று பிணைத்துக் கொண்­டு­வ­ரு­வதை முற்­றாதக் தவிர்த்தல் என்ற நடைமுறைகளைப் பேணி இவ்வாறான மாடறுப்புப் பணியைச் சரியாகச் செய்ய நாம் முற்படுவதனூடாக எமதும், உலகினதும் உணவுத் தேவையை பேணுவதுடன், இயற்கையையும் சமநிலையோடு காப்போம். எமது நாடு என்பதில் திடமாக உழைப்போம்.

ஒரு சிறிய விடயத்தில் நாம் விடும் தவறால் எமது மொத்த சமுதாயமுமே கேவலமாக நோக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றி விடும்.

5 கருத்துரைகள்:

1 varudathuku mattirachiyai sappidamal vittu parungal.nilamai seeragum.anal adai nam seiya thayar illai.

அருமையான செய்தி

Reena Javed kooruvadhai pinpatrinaal thhanaakha pirachinakhal theerum. iruppinum author sonnadhu correct.

very detailed and to be concerned

மிக்க நன்ரி

Post a Comment