July 17, 2016

"தேசிய கீதத்தைத் தமிழில்பாட உரிமை கேட்கிறோம், தேசிய நடனத்தை ஆடினால் அடித்துத் துரத்துகிறோம்"

-எம்.ரிஷான் ஷெரீப்-

'நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனத்தை ஆட வந்த சிங்கள மாணவர்களை வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்' என்ற இருமாப்புடனான பல தமிழ்ப் பதிவுகளை இன்று முகநூலில் காணக் கூடியதாக இருப்பது வருத்தத்தைத் தருகிறது.

தேசிய கீதத்தைத் தமிழில் பாட உரிமை கேட்கிறோம். எங்கும் அரங்கேற்றிட உரிமையுள்ள தேசிய நடனத்தை விழாவில் ஆடினால் அடித்துத் துரத்துகிறோம். மிகவும் மோசமான உளப்பாங்கல்லவா இது?

பல்கலைக்கழகங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவை. அதிலும் யுத்த பூமி என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்னும் விஷேடமானது.

'யாழ்ப்பாணமானது, இப்பொழுதும் ஒரு கலவர பூமியாகவே இருக்கிறது' எனவும், 'அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் சிறு விடயத்துக்கும் கலவரங்களை உண்டுபண்ணக் கூடியவர்கள்' எனவும் உலகுக்குக் காட்டும் தேவை இப்போதும் அரசுக்கு இருக்கிறது.

இராணுவத்தை முற்றுமுழுதாக வடக்கிலிருந்து அகற்றும்படி கோரிக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இராணுவத்தை வடக்கில் இன்னும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இம் மாதிரியான ஒரு சம்பவம் கூட அரசுக்குப் போதும்.

இம் மாதிரியான வன்முறைகளில் ஈடுபடும்போது அல்லது பிறரால் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படும்போது, சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் தமிழ் பேசும் மாணவர்களது நிலைப்பாட்டையும் கருத்திற் கொள்ள வேண்டும். தீயின் திரி தொடர்ச்சியாகப் பற்றி எரியத் தொடங்குமானால் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இப்போது மாத்திரமல்ல. அது அடுத்த தலைமுறைக்கான கல்வியையும், இன்னும் ஓரிரு வருடங்களில், இத் தலைமுறைக்கான தொழில்வாய்ப்புக்களையும் கூடப் பாதிக்கும்.

இச் சிறிய தீவில், இழப்புக்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு மாத்திரமானதே. சிந்தித்து செயற்படுங்கள்.

வன்முறையில் வீரமில்லை. வனாந்தரங்களில் வேட்டைக்கென வைக்கும் பொறிகள் வைப்பவர்களைத் தவிர, வேறெவரினதும் பார்வைக்குத் தெரிவதில்லை.

11 கருத்துரைகள்:

Nothing wrong in stage kandian dance in Jaffna.
Both Tamil & Singalese students ate innocence here.
But...if Govt don't solve ethnic problem, these incidents will happen again in future.
This is what UN/USA/UK keep advising SL Govt.
So....SL Govt should take responsibility, no one else.

தனியாக படித்தால்தான் பாத்தடித்து இங்கு படம் பெற முடியும் கணவனாக படித்தால் அது நடப்பது கடினம்
அதுதான் அவர்களுக்கு தனி அழகு வேண்டும்

இதனை இப்போது யாழ் பணத்தில் இருந்து வரும் மாணவர்களை போது வான இடத்தில் டெஸ்ட் பண்ணின நன்கு புலனாகும்

4+2 =6 என்பதற்கு யோசிக்கிறார்கள் ஆனால் விரிவுரை யாளர்களாக இருக்கார்

யாழ்ப்பாண சிங்கள மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டு கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதட்கு முழுமையான உரிமை உண்டு அதை அமுல்படுத்துவதட்கு அரசும், பல்கலை கழக நிர்வாகிகளும் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும். வன்முறையை மிகவும் வண்மையாக கண்டிக்கிறோம்.

யாழ்ப்பாண சிங்கள மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டு கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதட்கு முழுமையான உரிமை உண்டு அதை அமுல்படுத்துவதட்கு அரசும், பல்கலை கழக நிர்வாகிகளும் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும். வன்முறையை மிகவும் வண்மையாக கண்டிக்கிறோம்.

தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள்

National anthem enough only sinhala languadge.In india thousands of differents languadge but their national anthem only one languadge singing.

சுதந்திர இலங்கையில் அவரவர் கலாசாரத்தை பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது

Jaffna university belongs to all Sri Lankans. Sinhalese students have the right to practice their culture. No one can stop this.

Ajan : if there is no wrong, then why this kolavery. If Tamil Teachers in Jaffna had strictly taught the Tamil students the manners and integrity, all these fights will not happen. It is the lecturers you need to blame and not the government. Don't be a typical Lankan to blame Government. I think some wants to start a war again. Remember it's all of us who will suffer. I wish the Jaffna University takes the responsibility.

Raskan; நீங்கள் என்னதான் நடந்தாலும் அரசாங்கத்தைதான் ஆதரிப்பவர்கள் என தெரியும், பராவாயில்லை.
கண்டி நடணம் எங்கும் ஆட உரிமையைண்டு.

ஆணால் இப்படி நிகழ்வுகள் நடக்கும் என ஐ.நா வும் அமரிக்கா வும் ஏற்கனவே எமது அரசாங்கத்தை எச்செரித்தவர்கள், இனப்பிரச்சினை தீர்காவிட்டால்.

Thiru Ajan, Naan arasangaththai aatharippavan alla. Maaraga maatram nammidaththil irundhu uruvaaga vendum ena nambugiren. Ennathaan UN, US thittamittalum naam otrumaiyaagavum sindhippavargalaagavum irundhaal yaaraalum nammai asaika mudiyaathu. Yen, arasaangaththitkum thaan.

Vadakku makkalukkaga endrum varundhugiren. Eththanai thunbangal? maanavargalin ichcheyal naalai ella makkalaiyum paathikka koodaathu. Manavargal ithai thaamaga unarndhu apologies panninaal pothum. Ithai University nirvaagam thaan seyya mudiyum.

Ina piratchinaikku theervu illai. piraandhiya theervu oru samugaththaarukku saarpaaga amayum.

Naamaaga emmananilaigalai maatra vendum. Kadinamthaan. Inavathaththai thoondum Sinhala, Tamil, Muslim arasiyalavathigalai kalai aruththaal pothum. Ina piratchinai theerum.

Post a Comment