Header Ads



வைத்திய நிபுணர் ஷகிலா தலைமையில், நிந்தவூர் வைத்தியசாலையில் முதல்முறையாக சத்திர சிகிச்சை


நிந்தவூர் ஆதர வைத்தியசாலையில் முதல் முறையாக மயக்க மருந்து கொத்து "ஹேர்னியா மற்றும் ஹைரேசில். போன்ற இரு சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக 22-07-2016ல் நடைபெற்றது.

இச்சத்திர சிகிச்சையானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்(M.S) திருமதி.எ.ஷகிலா அவர்களின் தலைமையில் Dr. ரவிந்திரன் (சேர்ஜன்) அவர்கள், Dr. றியாஸ், Dr.கபூர் உதவிகளோடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது தொடர்பாக வைத்திய நிபுணர் திருமதி எ.ஷகிலா (M.S) அவர்கள் கூறுகையில் நிந்தவூர் மக்கள் முன்னர் இதுபோன்ற சத்திர சிகிச்சை மேற்கொள்வதாயின் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்திய சாலைக்கு அல்லது அக்கரைப்பற்று  வைத்தியசாலைக்கு சென்றே இச்சத்திர சிகிச்சை பெறவேண்டியிருந்தது. தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இச்சிகிச்சை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் வெகு விரைவில் முற்று முழுதாக மயக்க சத்திர சிகிச்சை இங்கு ஆரம்பிக்கபடுமென வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக மயக்க மருந்து கொடுத்து வெற்றிகரமாக ஹேர்னாயா, சத்திர சிகிச்சை இடம்பெற்றமைக்கு பாராளுமன்ற உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சருமான பைசால் காசிம் மற்றும் மாகண சபை உறுபிபானரும் சுகாதார  அமைச்சருமான நசீர் அவர்களும் வைத்தியர்களை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

முஹம்மட் ஜெலீல்,



No comments

Powered by Blogger.