Header Ads



ரணில் - சஜித் லடாய்..? இடையில் புகுந்த மைத்திரி..??

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொரஹாகந்த நீர்த்தேக்கத்திட்டத்தை திறப்பதற்கான நிகழ்வில் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கான அழைப்பு விடுக்கும் போது பிரதமரும் அருகில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயற்பாட்டினால் பிரதமர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தங்கள் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விடவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக உள்ளார் என ஒரு கதை பரவி வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியில் குழப்பம் இருந்த காலப்பகுதியில், அவரது தொகுதியில் “சசுனட்ட அருண” என்ற நிகழ்ச்சியை நடத்தும் போது குறைந்த பட்சம் தொகுதி அமைப்பாளருக்கேனும் அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கடந்த வாரம் சஜித் பிரேமதாஸவுக்கு தெரிவிக்காமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நெருக்கமாக உள்ள கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளதாக சஜித்திற்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சஜித் கோபமாக இருந்தார் எனவும் மனவேதனையடைந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.