Header Ads



ராஜபக்ஷர்களின் வாகன கொள்ளை அம்பலமானது

கடந்த வருடம் இறுதி வரையில் ராஜபக்சர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்டுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மொத்த பெறுமதி 7380 கோடி என தெரிய வந்துள்ளது.

அவற்றில் 806 கோடி பெறுமதியான வாகனங்கள் ராஜபக்ச குடும்பத்தின் பயன்பாட்டிற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் முழு பெறுமதியான 164 நிறுவனங்களின் முழு பெறுமதியில் இருந்து 10.2% வீதம் ராஜபக்சர்களின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதியின் வாகனம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் வாகனம், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சரின் வாகனம், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் வாகனம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வாகனம், சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சரின் வாகனம் ஆகிய ஆறு நிறுவனங்களின் முழுமையான வாகனங்களே ராஜபக்சர்களின் கீழ் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இவ்வளவு பெறுமதிகளை கொண்ட முழுமையான வாகனங்கள் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பணியாளர்களுகான வாகனமாகும். அந்த அமைச்சுகளின் கீழ் அரச நிறுவனங்களின் வாகனங்கள் காணப்படவில்லை.

உதாரணமாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் பயன்பாட்டிற்கு 10 கோடி பெறுமதியான வாகனம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்திற்கு பெரிய பங்கை பெற்றுக்கொடுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 2014ஆம் ஆண்டு இறுதி வரையில் 9 கோடி பெறுமதியான வாகனங்கள் மாத்திரமே காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2007ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை அந்த திணைக்களத்திற்கு தொடர்ந்தது இந்த பெறுமதியான வாகனங்கள் மாத்திரமே காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இப்ப என்ன செய்ய போறிங்க கூப்பிட்டு விருந்து வைங்க உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது செய்யவும் மாட்டீர்கள் செய்தியாக போட்டு பொதுமக்களின் BP யை ஏற்றாதீர்கள் அந்த வாகனங்களினி மிச்சம் மீதீ இருந்தால் பழைய இரும்பு கடைக்கு கொடுத்து பணத்தை நீங்கள் சுறுட்டுங்கள்

    ReplyDelete
  2. இப்ப என்ன செய்ய போறிங்க கூப்பிட்டு விருந்து வைங்க உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது செய்யவும் மாட்டீர்கள் செய்தியாக போட்டு பொதுமக்களின் BP யை ஏற்றாதீர்கள் அந்த வாகனங்களினி மிச்சம் மீதீ இருந்தால் பழைய இரும்பு கடைக்கு கொடுத்து பணத்தை நீங்கள் சுறுட்டுங்கள்

    ReplyDelete
  3. எல்லாம் அம்பலமாகுது ஆனா எப்ப கைதுசெய்து தன்டனை வழங்க போறீங்க?
    Never!

    ReplyDelete

Powered by Blogger.