Header Ads



மகிந்தவின் பாதயாத்திரைக்கு, பெருமளவு பணம் தேவை - சிங்கள வர்த்தகர்களிடம் வசூல்


-Tw-

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் பாத யாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த யாத்திரைக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றை தினத்திற்கு மாத்திரம் 18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த நாட்கள் முழுவதும் மஹிந்தானந்த, ஜோன்ஸ்டன் மற்றும் விமல் வீரவன்ச ஆகிய மூவரும் தங்கள் அரசாங்கத்தின் போது நன்மை பெற்றுக் கொண்ட வர்த்தக்கர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் நிதி சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பிரதானமாக எக்ஸஸ் (Access) நிறுவனத்தின் உரிமையாளரான சுமல் பெரேராவினால் கிட்டத்தட்ட 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. ஊடக நடவடிக்கைகளுக்கான அனைத்து ஒளிப்பதிவு மற்றும் பணமாக 40 மில்லியன் ரூபாவை சிங்கள தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதானி திலித் ஜயவீர வழங்கியுள்ளார். கடந்த 13ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்

இதன்போது நவலோக குழுமத்திடம் முன் வைக்கப்பட்ட நிதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜோன்ஸ்டனினால் 12 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் பணம் செலவிடப்பட்ட முறை தொடர்பிலான அட்டவனை ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது வரையில் கூட்டு எதிர்க்கட்சியின் சமூக வலைப்பின்னல் ஆர்வலர்களுக்கு இடையில் இந்த பணம் பிரிந்து செல்வது தொடர்பில் சிக்கல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமைக்கமைய இவ்வளவு பெரிய பணத் தொகையினை செலவிட்டு, நடத்தப்பட்ட முதலாவது பாத யாத்திரையாக இது அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.