Header Ads



எர்துகான் வெற்றி பெற்றுவிட்டார் - இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்

-Aashiq Ahamed-

சொற்ப தொகையான புரட்சியாளர்களே துருக்கிய இராணுவக் கவிழ்ப்பின் தோல்விக்குக் காரணம். -இஸ்ரேலிய பாதுகாப்பு நிபுணர் -

இஸ்ரேலிய பாதுகாப்பு நிபுணரான யோசி மெல்மன் “மஆரிப்” பத்திரிகையின் கட்டுரையொன்றிலே துருக்கிய புரட்சி நடவடிக்கையில் குறைவான எண்ணிக்கையினர் பங்கேற்றமையானமையே அதன் தோல்விக்குப் பிரதான காரணியாகும் என்றும் அத்தோடு சமூக ஊடகங்களினது செல்வாக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின என்றும் கூறியுள்ளார்.

மேலும் துருக்கிய அதிபர் அர்துகானிற்கு தமக்கெதிராக இடம்பெற்ற தோல்வியுற்ற பரட்சி நடவடிக்கையினை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடியுமாக இருந்தது, குறிப்பாக புரட்சியை தோல்வியுறச்செய்வதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தளங்களிநூடாக பாரியதோர் பங்களிப்பை அவர் வழங்கினார், அச்சந்தர்ப்பத்தில் தொலைபேசி அழைப்பு மூலமாக மக்களை வீதிகளுக்கு வந்து போராடுமாறு அழைப்பு விடத்தார், தனது டிவிட்டர் கணக்கிலிருந்து பல பதிவுகளை இட்டார், மேலும் அவர் ஊடகங்களில் அதிகமாக தங்கியிருந்தார் என்று மெல்மன் சுட்டிகாட்டியுள்ளார்.

துருக்கிய புரட்சியாளர்கள் தரத்தில் குறைந்த இராணுவ வீரர்கள் என்பது தெளிவாகின்றது, தங்களது புரட்சி நடவடிக்கையில் அர்துகான் மக்களுக்காக நேரடியாக உரையாற்றுவதை விரைந்து தடுத்ததைத் தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு எந்த வெற்றியையும் அவர்களால் ஈட்டிக்கொள்ள முடியவில்லை, என்றாலும் இந்தப் புரட்சியானது கடந்த காலப் புரட்சிகளின் வரலாறு சொல்வது போல தனது எட்டுக்களை எடுத்து வைத்துள்ளது அவதானிக்கத்தக்கது, புரட்சியாளர்கள் பொஸ்பர் நகரின் ஒடுங்கிய வீதியிலிருந்து இஸ்தான்புலை இணைக்கும் பாலம், ஐரோப்பிய ஆசியாவிற்கு இடையிலான நடுக்கோட்டை, அன்காரவின் மத்திய சந்திப்பகுதிகள் என்பவற்றை முற்றுகையிட்டுள்ளனர், விமானிகள் பாராளுமன்ற கட்டிடத்தொகுதிகளிலும், பொது உளவுத்துறைத் தலைமையகத்திலும் குண்டுகள் வீசியுள்ளனர்.

மேலும் மெல்மன் (இவர் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்புடையவர்) குறிப்பிடுகையில் துருக்கிய இராணுவப் படைகள், யுத்த டாங்கிகள் உட்பட ஜனாதிபதி மாளிகையை வந்தடைந்ததாகவும், வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடத்தொகுதிகளை முற்றுகையிட்டதாகவும், புரட்சியானது நாட்டை ஆக்கிரமித்து விட்டதாக செய்தி பரப்புமாறு ஊடகவியலாளர்களை நிர்பந்தித்ததாகவும், என்றாலும் இவை அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமேயாகும் அது மிகச் சொற்பமான தொகையேயாகும் என்பதாலே இப்புரட்சி தோல்வியுற்றதாகவும் தெளிவுபடுத்துகின்றார்.

அக்கட்டுரையிலே பின்வருமாறு கூறி முடிக்கின்றார்:- “ அர்தூகான் தனது ஆதரவாளர்களை வீதிக்கு இறங்கி போராடுமாறு அழைப்பு விடுத்ததில் வெற்றி பெற்றுவிட்டார் அவ்வழைப்பை ஏற்று அவர்கள் உடனடி செயற்பட்டனர், புரட்சியில் பங்கு கொண்ட படைவீரர்களின் பாதைகளுக்கு முன்னால் அவர்கள் தடைக்கம்பங்களையும், முள் வேலிகளையும் இட்டனர், அர்தூகானிற்கு விசுவாசமான இரகசிய பொலிசாரின் பங்களிப்பினால் ஆட்சிக்கவிழ்பாளர்களோடு மோதலில் ஈடுபட்டனர், அவர்களில் அதிகமானோர் கைதும் செய்யப்பட்டனர்.

நன்றி:- அல்ஜசீரா (http://www.aljazeera.net/…/%D8%AE%D8%A8%D9%8A%D8%B1-%D8%A5%…)

1 comment:

Powered by Blogger.