Header Ads



பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு மைத்திரியும், மஹிந்தவும் போட்டிபோட்டு வாழ்த்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்குவாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை வழங்கும் என்றும் தன்நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனிற்கு பதிலாக நேற்றைய தினம் தெரேசாபதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. 

2

முடிவுக்கு வந்த பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரேசா மே வை வாழ்த்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானிய பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதற்காக நான் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியாவை புதிய வழிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக எடுத்த தீர்மானம் குறித்து சிலர் கவலை வெளியிட்டாலும் இலங்கை உட்பட பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளன.

ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருக்கும் நாடுகளுக்கு புதிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்குள் முக்கியமான இடத்தில் இருப்பதால், அந்த அமைப்பை சேர்ந்த நாடுகளின் இறையாண்மை, சுயாதிபத்தியம், பொருளாதார அபிவிருத்தியை பாதுகாப்பதில் தலைமையேற்பது சம்பந்தமான முக்கிய பொறுப்பு பிரித்தானியாவுக்கு இருக்கின்றது.

பிரித்தானிய பிரதமர் என்ற வகையில் உங்களது பதவிக்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.