Header Ads



ஜாகிர் நாயக்குக்கு எதிராக, நரோந்திர மோடி


மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். 

ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கென்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.  இருநாடுகளும் தங்களுடைய நல்லுறவை வலுப்படுத்த பாதுகாப்பு மற்றும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஆகிய உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கென்யா அதிபர் உகுரு கென்யாட்டாவுடன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “கென்யாட்டா மற்றும் நான் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதமயமாதல் இருநாட்டிற்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் பொதுவான சவால் என்று ஒத்து கொண்டோம். சைபர் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக போரிடுதல் உள்ளிட்டவையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் செய்து உள்ளோம்,“ என்றார். 

”மத போதகர்களின் வெறுப்பு மற்றும் வன்முறை போதனைகள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கவாதிகளுக்கு யார் பாதுகாப்பான உறைவிடம் வழங்குகிறார்களோ, அவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று  பிரதமர் மோடி பேசினார்.


1 comment:

  1. Finally the cat is out of the bag...who ever spoke against Zakir,please do understand that you are supporting the beloved Modi Jee and his conspiracy. These all are drama created by Modi to divert the Indian mind set. But a good man will easily understand the facts.

    ReplyDelete

Powered by Blogger.