Header Ads



எர்துகான் பேசிய தொலைபேசியை, அதிக விலைக்கு வாங்கும் சவூதியின் முயற்சி நிராகரிப்பு


துருக்கியில் இராணுவ சதிப்புரட்சியை முறியடிக்க ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நாட்டு மக்களுக்கு வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்த கையடக்க தொலைபேசியை சவூதி அரேபிய நாட்டவர் ஒருவர் ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு விலை கோரியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று இரவு இராணுவ சதிப்புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே எர்துவான் தொலைக்காட்சி ஊடே கையடக்க தொலைபேசி வழியாக வீடியோ மூலம் மக்களை வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து வீதியில் திரண்ட மக்கள் கிளர்ச்சி செய்த இராணுவத்தினருக்கு எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட கையடக்க தொலைபேசியை கேட்டு சவூதி நாட்டவர் ஒருவர் துருக்கிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது அவர் குறித்த கையடக்க தொலைபேசியை 266,962 டொலர்கள் அல்லது ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு கேட்டுள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை நிராகரித்திருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், அந்த தொலைபேசியை அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார். 


4 comments:

  1. When we will see a real coup in Saudi to topple this long time family rule ... I think it is not too long ...

    ReplyDelete
  2. சஉதி அரசு கேட்டது போலல்லவா எழுதி உள்ளீர்கள். உங்கள் உள்ளீர்கள் நோக்கம் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.