Header Ads



பாதயாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்த நிகழ்ச்சிகள் - கண்டிக்கிறது கபே

கண்டியிலிருந்து கொழும்பு வரை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடாத்தவுள்ள எதிர்ப்பு பாதை யாத்திரையை தடுப்பதற்காக அரசாங்கத்தின் பலத்தை முறையற்ற விதத்தில் பிரயோகிக்க வேண்டாமென நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சிகளிடம் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேண்டு கோள் விடுத்துள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரை வரவுள்ள எதிர்ப்பு பாதை யாத்திரை செல்லும் பாதைகளின் ஆங்காங்கே ஏனைய கட்சியினரும் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். பாதயாத்திரையை குழப்பும் நோக்குடனே இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரியவருகிறது.இதற்காக கண்டி, மாவனல்ல, நிட்டம்புவ போன்ற இடங்களில் ஒன்று கூடுமாறு பாதயாத்திரைக்கு எதிரான கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்ப்பு பாதை யாத்திரை செல்லும் இடங்களில் தடங்கலை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் செயற்பாடுகள் மட்டுமின்றி சிவில் அமைப்புகளின் செயற்பாடுகளை கூட மேற்கொள்ள முடியாதிருந்தது. எனவே ஜனநாயக நாடொன்றில் அரசியல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது, மக்களை ஒன்று கூட்டுவதற்கு உரிமைகள் இருக்கின்றன.

எனவே அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டுமென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.