Header Ads



நாம் தயா­ராக இருக்­கிறோம் - BBS

முஸ்லிம் தரப்பு பொது­ ப­ல­சே­னாவின் செய­லா­ளரை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்தால் நாம் தயா­ராக இருக்­கிறோம். பேச்­சு­வார்த்­தைகள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கும் எமக்கும் இடையில் நிலவும் முரண்­பா­டுகள் தொடர்பில் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார்.

முஸ்லிம் தரப்­பு­ட­னான நேரடிப் பேச்­சு­வார்த்தை தொடர்­பி­லான பொது­ப­ல­சே­னாவின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;ஆனால் முஸ்லிம் கவுன்­ஸி­லையும் அசாத் சாலி­யையும் நாம் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் பகி­ரங்க விவா­தத்­துக்கு அழைக்­கிறோம்.

சில ஆவ­ணங்­க­ளுடன் அவர்­களை பகி­ரங்க விவா­தத்தில் சந்­திக்க விரும்­பு­கிறோம்.அசாத்­சாலி தற்­கொலைப் படை­யா­க­மாறி ஞான­சார தேரரை அழித்­து­விட்டு தானும் இறக்க தயார் எனும் கருத்­துப்­பட பேசி­யி­ருக்­கிறார். புத்தர் பெரு­மா­னுக்கு ஏசினால் இவ்­வாறு செய்­யும்­படி புத்த பெருமான் போதிக்­க­வில்லை. புத்தர் கருணையையே போதித்துள்ளார் என்பதை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

1 comment:

  1. அசாத் சாலியோ முஸ்லிம் கவுன்சிலோ நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு இவர்களுடன் போவதென்பது. சிங்கள மக்கள் மத்தியில் வலுவிழந்த BBS எனும் மிருகங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு ஒப்பானது. ஞானசாராவுக்கு இப்ப்பொழுது தேவை தான் இழந்த மதிப்பை சிங்களவர்களிடம் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான விளம்பரம் மட்டுமே

    ReplyDelete

Powered by Blogger.