Header Ads



ஜம்இய்யத்துல் உலமா தலைவராக மீண்டும் ரிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் கபூரி (படங்கள் - முழு விபரம்)


மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (24.07.2016) பி.ப. கண்டி லைன் பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது.

சுமார் 25 மாவட்டங்களிலுள்ள மாவட்டக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் ஆகியோரே மத்திய சபையின் அங்கத்தவர்கள் ஆவர். சுமார் 75 பேர்கள் கொண்ட இச்சபையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 25 பேர்கள் நிறைவேற்றுக் குழுவுக்கு தெரிவு செய்யப்படுவர். பின்பு குறித்த 25 பேர்களுக்கு மத்தியிலும் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே பதவி தாங்குனர்கள் தெரிவு செய்யப்படுவர். இதனடிப்படையில் மீண்டும் கீழ்வருமாறு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் : அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி
பிரதித் தலைவர் : அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத்
உப தலைவர்கள் : அஷ்-ஷைக் எம்.எச்.எம்.யூசுப் முஃப்தி
அஷ்-ஷைக் எம்.ரிழா
அஷ்-ஷைக் எஸ்.எச்.எம்.ஆதம் பாவா
அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் ஹாலிக்
அஷ்-ஷைக் எம்.ஹாஷிம் சூரி

பொதுச் செயலாளர் : 
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் கபூரி
உ. செயலாளர்கள் : 
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.தாஸீம் கபூரி
அஷ்-ஷைக் எம்.முர்ஷித் முழப்பர்

பொருளாளர் : அஷ்-ஷைக் எம்.கலீல்
உ. பொருளாளர் : 
அஷ்-ஷைக் எம்.கே.அப்துல் றஹ்மான்





1 comment:

  1. May Allah Guide these people to lead the Muslims of Srilanka as per Quran and Sunnah understood by the Salaf us saliheens.

    Let them not introduce and support SUFISM, HAWARIJ, MUTAZILA manhanj or Any current day group/s influenced by above groups amoung our Muslims.

    1/73, That is the SALAF us SALIHEENS way, the STRAIGHT path shown to us by Muhammed (sal).

    ReplyDelete

Powered by Blogger.