July 08, 2016

முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் - ACJU உருக்கமான வேண்டுகோள்

நாட்டில் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத சக்­திகள் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ளன.

இச்­சந்­தர்ப்­பத்தில் ரமழான் மாதம் முழு­வதும் ஆன்­மீகப்  பயிற்சி பெற்று தர்­மங்கள் வழங்கி நல் அமல்கள் செய்­துள்ள நாம் எமது நற்­பண்­பு­களைப் பேணிப் பொறு­மை­ காக்க வேண்டும்.

பெரும்­பான்மை சமூ­கத்தில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாம் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி விடக்­கூ­டாது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்­லிம்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு விடுத்­துள்ள அறி­வு­றுத்­த­லிலேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட அறி­வு­றுத்­தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் முஹம்­மது நபி­யையும் அவ­ம­தித்துப் பேசி­யுள்­ள­மைக்கு அவ­ருக்கு எதி­ராக உலமா சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறை­யிட்­டுள்­ளது.  

ஏனைய முஸ்லிம் அமைப்­பு­களும் முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளன.

ஒரு மாத­காலம் நாம் தொட­ராக ஆன்­மீகப் பயிற்­சிகள் பெற்­றி­ருக்­கிறோம். பசித்­தி­ருந்து நோன்பு நோற்று அல்­லாஹ்­விடம் கையேந்­தி­யிருக்­கிறோம். நிச்­சயம் அல்லாஹ் எம்மைப் பாது­காப்பான்.

அதனால் நாம் உணர்ச்­சி­வ­சப்­ப­டாது நிதா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும்.

ரமழான் மாதத்தில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் சக வாழ்­வி­னையும் பலப்­ப­டுத்தும் வகை­யி­லான இப்தார் நிகழ்­வுகள் நடந்­தேறின.

இரா­ணுவமும் ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்­வு­களில் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பா­டுமே வலி­யு­றுத்­தப்­பட்­டன. எனவே நாட்டின் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பெரும்­பான்­மை­யினர் இன­நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வை­யுமே  ஆத­ரிக்­கின்­றனர். ஒரு சிறிய குழு­வி­னரே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர்.

இந்த இன­வாதக் குழு­வினர் முஸ்­லிம்­களின் நட­வ­டிக்­கை­களை மிகவும் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றனர். அதனால் நாம் பண்­பாட்­டா­ளர்­க­ளாக ஏனைய மதங்­க­ளையும் கௌர­விப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

உலமா சபை இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் சக வாழ்­வி­னையும் வளர்ப்­ப­தற்­காக பல செயற்திட்டங்களை வகுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களாகவும்; சட்டத்தை மீறாத நற்பண்புள்ள முஸ்லிம்களாக ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாகவும் நாம் வாழவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 கருத்துரைகள்:

றஸுலுல்லாஹ்வின் மக்கா வாழ்வு எமது பொறுமைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

Muslims need to be always wise. because of the current political situation in Sri Lanka will try to use Muslim as their political tool to change people minds.

ஞானசார தேரரை நேரடியாக விவாதத்திற்கு அழைத்து பகிரங்க மாக விளக்கம் கொடுக்க உலமா சபைக்கு முடியாதா? இதனூடாக சிங்கள மக்கள் விளக்கம் பெறுவார்கள். ?

Lodge a file in court rather than bagging to Maithri.

சிறுபான்மையாக மக்காவில் ரசூலுல்லாஹ் எவ்வாறு வாழ்ந்ந்தார்கள் என கவனமாய் ஆராய்ந்து படிப்பினை பெற வேன்டும். அதுவே சோதணைகளின் போது எமக்கு வழி காட்டல்.

இவனை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் செரியான வழி இவனைப்பற்றி எந்தக் கூட்டத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் பேசவே கூடாது பத்திரிகையாளர்கள் தோண்டித்தோண்டி கேட்டாலும் அதைப்பற்றி பேச விரும்பவில்லை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அரசாங்கமும் பாதுகாப்பு துறையும் பார்த்துக்கொள்ளும் என்ற பதிலை மட்டுமே அனைவரும் கொடுக்க வேண்டும் இவன் பெயரையோ இவனின் இயக்கத்தின் பெயரையோ இழுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை இவன் முடிந்த அளவுக்கு குரைத்துவிட்டு ஓய்வான் இவ்வாறு நாம் அமைதியான நம்முடைய வேலையை செய்யும் போது பெரும்பான்மை இன மக்கள் அவனுக்கு தகுந்த பதிலை கொடுக்கும் அதுவரை பொறுமை காப்போம் இன்ஷா அல்லாஹ் வெற்றி எப்போதுமே நம்பக்கம்தான்

No any debates with foolish peoples. That is useless

I honor the ACJU for not doing anything for the sake of Muslim ppl except of publishing unwanted statement and worked with enemies of Muslims' to ban the entrance of scholar of SLTJ into the country.

சரீப் தீன் அவர்களே உலமா சபையோடு விவாதிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது இவன்இவனின் இமேஜை கூட்டிக் கொள்ள ஊளைவிட்டு திரிகிறான் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை

சரியாகச் சொன்னீர்கள்.

I have my suspicious wheather ACJU and Bodu Bala Sena have some underground dealings. Previously ACJU had close ties with Gotta and Mahinda, and due to the strong relationship, ACJU had enjoyed many privilages incluing Geneva Trip on public expenses. Upto now ACJU has not condemned the activities of BBS and always order the muslim community to remain silence, even during Aluthgama and Beruwala violence.

I thnink the time has come to reject the commmad of ACJU and Muslims have to get togeather and initiate appropriate action against BBS.

I totally agree with u bro...better these mufthi's wear a hijab's....they just cowardly people..

Post a Comment