Header Ads



"இலங்கையில் 6 பேரில், ஒருவருக்கு ஏதேனும்.."


இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் வகை நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், பக்கவாதம், உள நோய், மூட்டு வலி உள்ளிட்ட நீண்ட கால நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 15 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியருக்கு அதிகளவில் தொற்று நோய்களே பரவுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.