Header Ads



துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை, எர்துகான் - ஒபாமா பேச்சு

துருக்கியில் கடந்த வாரம் நிகழ்ந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, 50 ஆயிரத்திற்கு மேலானோர் இனம் காணப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் ரசிப் தயிப் எர்துவானுக்கு விசுவாசமாக இல்லாதோரை பணியிலிருந்து நீக்குவது ஆசிரியர்கள், பல்கலைக்கழக டீன்கள் மற்றும் ஊடகங்கள் என செவ்வாய்கிழமை விரிவானது.

இவர்கள் அனைவரும், இந்த எழுச்சியை தான் இயக்கவில்லை என்று மறுத்துள்ள அமெரிக்காவில் வாழும் மதப் போதகர் ஃபெத்துல்லா க்யூலெனின் கூட்டாளிகள் என்று துருக்கி அரசு கூறியுள்ளது.

இந்த மதப் போதகர் ஒரு “தீவிரவாத அமைப்பை” வழிநடத்தினார் என்று பிரதமர் பினாலி இல்டிரிம் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா க்யுலெனை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை செவ்வாய்கிழமை அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அதிபர் எதுவானும் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது எழுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

அவரை துருக்கியிடம் ஒப்படைப்பது பற்றிய தீர்மானம் இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி உருவாக்கப்படும் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

க்யுலெனுக்கு எதிரான வழக்கில் சான்றுகளை கேட்பதற்கு பதிலாக, அவரை “சந்தேகத்தின் அடிப்படை“ - யில் அமெரிக்காவால் திருப்பி அனுப்ப முடியும் என்று துருக்கியின் செய்தித் தொடர்பாளர் முன்மோழிந்துள்ளார்.

3 comments:

  1. Most people supporting erdugan regarding failed coup.they don't know what's actually behind failed coup "drama" by erdugan!

    ReplyDelete
    Replies
    1. So please let us know what is that
      "DRAMA" ? (only you know well ha?)

      Delete
  2. Online

    You are a right person to be the president of srilanka and head of secret agent.


    ReplyDelete

Powered by Blogger.