Header Ads



ஞானசாரருக்கு எதிராக 48 வழக்குகள் - துரிதப்படுத்த முஸ்லிம்கள் கோரிக்கை

 -விடிவெள்ளி ARA.Fareel-

புனித குர்­ஆ­னையும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல நீதி­மன்­றங்­களில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 48 வழக்­கு­களின் விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்­தும்­படி பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சி­யிடம் முஸ்லிம் அமைப்­பு­களும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

புனித குர்ஆன் அவ­ம­திக்­கப்­பட்­ட­மையும் அல்­லாஹ்வும் முஹம்மத் நபியும் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­மையும் எந்­த­வொரு முஸ்­லிம்­க­ளாலும் சகிக்க முடி­யாது.

முஸ்­லிம்கள் பொறுமை காக்­கி­றார்கள். ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய உரையில் அளுத்­கம கல­வரம் மீண்டும் தேவையா என்று வின­வி­யி­ருக்­கிறார்.

எனவே மீண்டும் இன­வன்­மு­றைகள் தோன்­றா­தி­ருக்க ஞான­சார தேரர் விசா­ரிக்­கப்­பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. 

மத்­திய மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் அசாத்­சாலி ஞான­சார தேரரின் மஹி­யங்­கனை உரை­யி­னது வீடியோ பதிவு நாடா­வையும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் கைய­ளித்தார்.

நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக ஞான­சார தேரர் கருத்­துக்­களை ஊட­க­மா­நா­டு­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளி­யிட்டு வரு­வ­தா­கவும் இன முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­ப­தா­கவும் முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் தெரி­வித்­தனர். 

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் இருக்­கின்­றன. நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டங்கள் அனை­வ­ருக்கும் சம­மா­னதே. இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மான செயற்­பா­டுகள் மதங்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள் வெறுப்புப் பேச்சு அச்­சு­றுத்­தல்கள் என்­ப­வற்­றுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி உறு­தி­ய­ளித்தார். 

பாது­காப்பு செய­லா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், அசாத் சாலி, ஹல்மி அஹமட், எம்.எஸ். எம். தாஸிம் மௌலவி முர்ஷி முளப்பர், ஹுசைன் பைலா, அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

2 comments:

  1. We are wasting our energy and valuable time on this issue and provoke the possitive minded budhists. Prophet Mohammad (PBUH) has taught us how to deal with believers of different faiths

    ReplyDelete
  2. Dear judge. So many cases against this racist. Finish this case off. Give this fellow the death sentence. Lots of problems solved

    ReplyDelete

Powered by Blogger.