Header Ads



ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை - பொறாமை கொண்டவளுக்கு 45 இலட்சம் அபராதம்

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸின் ஜெனிவாவில் உள்ள Cointrin விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிசாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.

இதனைக்கேட்ட பொலிசார், விமான நிலையத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு இருக்கிறது? என சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அழைப்பு குறித்து விசாரணையை நடத்தியதில் அது போலியான எச்சரிக்கை தகவல் என தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் மனைவி ஒருவர், தனது கணவர் தன்னை மட்டும் தனியாகவிட்டு பயணம் செய்வதால் பொறாமை கொண்ட அவர், தனது கணவரை தடுத்துநிறுத்துவதற்காக இதுபோன்ற போலியான தகவலை பொலிசாருக்கு கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பயணிகள் மற்றும் பொலிசாரின் நேரத்தினை வீணடித்ததோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற போலியான தகவலை பரப்பி பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இப்பெண்மணி மீது ஜெனிவா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வழக்கு விசாரணையில், இவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், 30,000 யூரோ அபராதமும்  (45 இலட்சம் இலங்கை) விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விமானநிலையத்தில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, இதனைப்பார்த்த பயணிகள் இங்கு என்ன நடக்கிறது? எதற்காக இவ்வளவு பொலிசார் உள்ளனர்? என ஒருவருக்கொருவர் கேள்விகளை எழுப்பியபடி இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.