Header Ads



அல்குர்ஆனைச் முழுமையாக, மனனம்செய்த 3 ஆட்சியாளர்கள்


-Abu Ariya-

அல்குர்ஆனைச் சுமந்து அதனை நடைமுறைபடுத்திய முன்மாதிரி ஆட்சியாளர்கள். தற்போதைய உலகில் அல்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து அதன்படி ஆட்சியும் செய்து காட்டிய, காட்டுகின்ற பெரும் தலைவர்கள்தான் இம்மூவரும் ஆவார்கள்.

1. சவுதி மன்னர் பைசல் பின் அப்துல் அஸீஸ்(1964-1975)

தனது‬ 16 வது வயதில் அல்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்தார். ஆக்கிரமிப்பு‬ நாடான இஸ்ரேலுடன் யுத்தம் செய்த ஒரேயொரு சவுதித் தலைவர். அமெரிக்க‬, நேட்டோ நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய மறுத்தவர்.

இஸ்லாமிய‬ உம்மத்துக்கு புது இரத்தம் பாய்ச்சி அதற்கு தைரியம் ஊட்டிய வீரத்தளபதி. அன்னாரின்‬ ஆட்சியைக் கண்டு அஞ்சிய சதிகார்ர்கள் 1975ம் ஆண்டு அவருடைய சகோதரன் ஒருவனைக் கொண்டு அவரைக் கொலைசெய்து ஷஹாத்த்தை பரிசளித்தார்கள்.

2.ஈஸா முஹம்மது முர்சி அய்யாத்(முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி 2012 - 2013)

‪‎அல்குர்ஆனை‬ முழுமையாக மன்னம் செய்த முதல் எகிப்திய ஜனாதிபதியும் பொறியியல் துறை பேராசிரியருமாவார். ‎எகிப்திய‬ வரலாற்றில் 2011 மக்கள் புரட்சியின் பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனநாயக முறையிலான ஜனாதிபதி தேர்தலில் 52 % மக்கள் விருப்போடு அதிபரானார்.

தனது ஆட்சிக்காலத்தில் நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் மக்களுக்காக சேவையாற்றியவர். அரச‬ மாளிகையில் வசிக்காமல் தனது குடும்பத்தாரோடு சாதாரண வாடகை வீட்டில் குடியிருந்தார்.

‪எகிப்தின்‬ 62% மக்கள் விருப்போடு ஷரீஆ அடிப்படையிலான அரசியலமைப்பை உருவாக்கினார். தனது மனைவி உட்பட ஐந்து குழந்தைகளை நாளாந்த குடும்ப பயிற்சியின் மூலமாக அல்குர்ஆனை முழுமையாக மன்னம்செய்ய வைத்தார்.

‪இவரது‬ நீதியான ஆட்சி முறையைக் கண்டு நடுங்கிய இஸ்லாத்தின் விரோதிகள் செய்த சதியினால் 2013 இல் பதவிகவிழ்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

3.பலஸ்தீன பிரதமர் , இஸ்மாஈல் கனிய்யா(2006 - இற்றைவரை)

‪‎காஸா‬ மக்களுக்கும் அதுபோல் முழு உலகுக்கும் தற்போது முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்பவர். இஸ்ரேலுக்கெதிரான‬ மிகச்சிறந்த ராஜதந்திரியும் திட்ட வகுப்பாளருமாவார்.

‪இஸ்ரேல்‬ இவரை பலமுறை கொலை செய்ய முயற்சித்தும் தோல்வி கண்டது
. ‎எளிமையான‬ , மக்களின் சேவகராக , பள்ளி இமாமாக, சிறந்த மார்க்க போதகராகராகவும் திகழ்பவர்.

5 comments:

  1. இவர்கள் உண்மையான இஸ்லாமிய வாதிகளாக காணப்பட்தால்தான் இவர்களது ஆட்சி விரைவாக முடிவுக்கு வந்தது. இது இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் ஆதரவுடனேயே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  2. தற்போதைய சௌதிமன்னரும் அல்குரானை மனனம் செய்தவர்தான்.

    வரலாறு தெரியாததால் விடபட்டாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பதை கட்டுரையாளர்தான் தெளிவுபடுத்தவேண்டும் .ஒரு வரலாற்று தகவலை பதிவு செய்யும் போது முறையான தேடலை மேற்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. சல்மான் பின் அப்துல்அஸீசும் குர்ஆனை மானம் செய்தவர்.

      Delete

Powered by Blogger.