Header Ads



பிரிட்டனில் 30 ஷரியா நீதிமன்றங்கள்


பிரிட்டனில் இருக்கும் சுமார் முப்பது ஷரியா நீதிமன்றங்கள் குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்துவருகிறது.

ஷரியா கவுன்சில்கள் இஸ்லாமிய சட்டம் குறித்து தீர்ப்பு வழங்குகின்றன.

இங்கு வரும் பெரும்பாலான பிரச்சனைகள் தமது இஸ்லாமிய திருமண உறவை முறிக்க விரும்பும் பெண்களின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

தன்னார்வ தொண்டர் அமைப்புக்களாக செயற்படும் இந்த ஷரியா கவுன்சில்களை பிரிட்டனின் நீதிபரிபாலனத்துறை அங்கீகரிப்பதில்லை.

மத நம்பிக்கைகள் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தையோ, குற்றச்செயல்களையோ அனுமதிக்க முடியாது என்று பிரிட்டன் உள்துறை அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்தது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் பர்மிங்ஹாமிலுள்ள ஷரியா நீதிமன்றத்தை நேரில் படம் பிடிப்பதற்கு, பிபிசி அபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. BBC

No comments

Powered by Blogger.