Header Ads



எனது உடலில் 3 குண்டுகள் இருக்கின்றன - 11 ஆயிரம் இலங்கை வைத்தியர்கள், லண்டனில் பணி

இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடுகையில், 

இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதாவது இவ்வாறு எட்கா உடன்டிபடிக்கை கைச்சாத்திடப்படுவதால் இந்திய வைத்தியர்கள் இலங்கைக்கு வந்துவிடுவார்கள் எனகூறுகின்றனர். ஆனால் ஒருவிடயத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று நான் கேள்வி எழுப்புகின்றேன். இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளில் பணி புரியலாம்.ஆனால் வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் பணிபுரிய முடியாதாம். என்ன நியாயம் என்று எனக்கு விளங்கவில்லை. 

இவர்கள் இப்படித்தான் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கொண்டு வரப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்காரணமாக எனது உடலில் மூன்று குண்டுகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை வெளியில் எடுக்க முடியாது. அவ்வாறு நாங்கள் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கா பாடுபட்டோம். 

ஆனால் அன்று அதனை எதிர்த்தவர்கள் பின்னர் அந்த மாகாண சபையில் அங்கத்துவம் வகித்தனர். அதுமட்டுமன்றி மாகாண சபையை ஆட்சியை தீர்மானிப்பதது தாங்கள் தான் என மார்த்தட்டிக்கொண்டனர். இவர்கள் போன்றவர்களின் செயற்பாடுகளே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் தடையாக இருக்கின்றன என்றார். 

4 comments:

  1. Foolish Minister, How many Sri Lankan doctors work in India ? None because Indian Law does not allow that. Let UK, Australian, Singapore doctors work here because, those countries allow Sri lankan professionals work there reciprocally.

    ReplyDelete
    Replies
    1. U r right. He is a Minister without kidney. That's what he can't understand India is different than UK. How many Sri Lankan doctors working at India? And whole world know the quality of Indian doctors.

      Delete
  2. இவர் விளங்காத ஒரூ அமைச்சர் UK யுடன் SRILANKA வைஒப்பிட்டுப் பேசுகிறார் எல்லாம் அரசியல் வியாபாரம்

    ReplyDelete
  3. Some people are talking about quality here. Don't forget
    that we have more than forty thousand quacks practicing
    in the country and there are pharmacies without qualified
    pharmacists and without air conditioning . Indian doctors
    are a better option than quacks ! Many westerners come to
    India for treatment because of affordability . Just take
    this example , go to a man power agency , ask for a carer
    for a loved one in your family . The price range is 40,000
    and above with food, accommodation and other liabilities .
    Now , if you and your wife are working and you have kids
    and an elderly to look after , what is your way out ? I
    would suggest that doors should open for affordable
    alternatives . Restricted man power imports where
    necessary , will one day happen in our country . Sooner
    the better .

    ReplyDelete

Powered by Blogger.