Header Ads



இரவு நேரம், 2 மணித்தியால இரகசிய பேச்சு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வற் வரியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து முக்கிய தலைவர்களுக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தனர்.

வற் உயர்வினால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து நிதி அமைச்சு முன் அறிவித்தல்களை உரிய முறையில் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் வெற் வரியூடாக அதிகளவு சலுகைகளை வழங்கினால் அரசாங்க வருமானம் வீழ்ச்சியடையும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களும் தங்களது யோசனைகளை முன்வைத்துள்ளனர்.எனினும், இந்த இரகசிய சந்திப்பு இணக்கப்பாடுகள் எதுவுமின்றி முடிவடைந்துள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. only one option go to middle east countries and ask your needs.

    ReplyDelete

Powered by Blogger.