Header Ads



291 மாணவர்கள் மீதான தடை நீக்கம் - உபவேந்தர் நாஜிம் அறிவிப்பு

-Tm-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகடிவதையில் ஈடுபட்ட முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள், வகுப்புகள் மற்றும் விரிவுரைகளில் பங்கு பற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார். 

பல்கலைக்கழகத்தின் ஒழுக்கக் கோவைகளை மீறி இந்த இரண்டாம் வருட மாணவர்கள், முதலாம் வருட மாணவர்களைப் பகடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்கமைய மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதற்கு கடந்த ஜுன் மாதம் 25ஆம் திகதி முதல் இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பகடிவதையில் ஈடுபட்ட 291 மாணவர்களே இவ்வாறு தடை விதிப்பட்டவர்களாவர். 

இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையற்ற தடை நாளை வியாழக்கிழமை (14) முதல் நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் காலை 06 மணிக்கு விடுதிகளுக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களுக்கான சகல கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக சகல மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.