Header Ads



ஜூலை 28 ல் எதிர்க்கட்சியின் 7 உறுப்பினர்களை சிறைவைக்க முயற்சி

ஜூலை 28ம் திகதியளவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏழு உறுப்பினர்களை சிறை வைக்க தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை இரண்டாவது முறையாக சிறையில் வைத்து விடுப்பளிக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -19- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியின் பின்னர் அந்த ஓய்வை பெற்றுக் கொள்ள வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்திடம் தான் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, மாபெரும் டீல் காரர்களை பிடிக்கப் போவதாக கூறினர், ஆனால் சில்லறை காரணங்களுக்காக உள்ளே அனுப்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை கைதுசெய்தது இவ்வாறான சில்லறைக் காரணங்களுக்காகவே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Rajapaksa and co. have been looted Billion & Billion dollers, is they little thinks as your aspest???

    ReplyDelete

Powered by Blogger.